தீபாவை கொல்ல வந்த ஐஸ்வர்யா.. போலீஸ் கஸ்டடியில் கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ரூபஸ்ரீ, ஐஸ்வர்யா இரண்டு பேரும் ஒரு திட்டம் போட்டு, கார்த்திக் காரில் போதை பொருளை வைத்துவிட்டு, போலீசுக்கு போனை போட்டு சொல்ல, காரை சுற்றி வளைத்து போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை செய்கின்றனர். அப்போது, காரில் இருந்து போதை பொருட்களை கைப்பற்றி இது எப்படி வந்தது என்று கேட்கின்றனர். மேலும், கார்த்தியை விசாரணைக்கு அழைக்கின்றனர். கார்த்திக் இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லியும் கார்த்திகை போலீசார் கைது செய்கின்றனர்.

ஐஸ்வர்யா வேறொரு பிளான் போட்டு, ஐஸ்வர்யா மயங்கி விழுந்தது போல் நடிக்கிறாள். இதனால் அவளை பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று அட்மிட் செய்கின்றனர். சந்தர்ப்பம் பார்த்து போலீசின் துப்பாக்கியை திருடும் ஐஸ்வர்யா அதை வைத்து போலீசை மிரட்டி இங்கிருந்து தப்பித்து விடுகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், வேனில் கச்சேரி நடக்கும் இடத்திற்கு சக்தி, தீபா மற்றும் ஆசிரமக் குழந்தைகள் சென்று கொண்டு இருக்க, வழியில் வேன் பழுதாகி நின்று விடுகிறது. இதனால் ஓட்டுநர் இறங்கிப்பார்த்துவிட்டு டயர் பஞ்சராகி விட்டது என்னிடம் வேறு டயர் இல்லை, நீங்க அனைவரும் வேனிலேயே இருங்க நான், பஞ்சர் போட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்ல, டென்ஷனான சக்தி, என்ன அண்ணா சொல்றீங்க.நாம இப்போ பெரிய பிரச்சனையில் இருக்கிறோம்.துங்கா கையில் மாட்டுனா அவ்வளவு தான் என்று சொல்கிறாள்.

எல்லாம் தெரியுதுமா, ஆனால், நான் என்ன செய்வது ஆணி குத்தி டயர் பஞ்சராகி இருக்கு. நீங்க, பக்கத்தில் இருக்கும் கோவிலில் இருங்க, நான் பஞ்சர் போட்டு வந்து, போன் பண்றேன் என்று சொல்லிவிட்டு டிரைவர் செல்கிறார். சக்தியும் இதுநல்ல ஐடியாத்தான் என்று தீபா மற்றும் குழந்தைகளுடன் கோவிலில் தஞ்சம் அடைகிறார்கள்.

கோவிலில் பதுங்கிய ஐஸ்வர்யா: மறுபக்கம் போலீசிலில் இருந்து தப்பித்த ஐஸ்வர்யாவை,போலீசார் துரத்திக்கொண்டு வர, அவர் தீபா இருந்த ஆசிரமத்திற்கு வந்து தீபாவை தேடுகிறாள். இதைப்பார்த்த செக்யூரிட்டி யார் நீ என்று கேட்க, ஐஸ்வர்யா கையில் இருக்கும் துப்பாக்கியை அவரின் தலையில் வைத்து, தீபா குறித்து விசாரிக்கிறாள். அப்போது செக்யூரிட்டி, நர்ஸ் சக்தி வேன் ஒன்றில் தீபாவை கச்சேரி நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்று இருப்பதாக சொல்லுகிறார். உடனே, ஏய் தீபா, இருடி வரேன் என்று தீபாவை தேடி வர, செக்யூரிட்டி சொன்ன, அந்த வேன் பழுதாகி இருப்பதைப் பார்த்துவிட்டு, அவ்வளவு சீக்கிரம், சக்தி குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கேயும் சென்று இருக்க முடியாது என்று, அந்த இடத்தை சுத்திப்பார்க்க அருகில் ஒரு கோவில் தென்பட நிச்சயம் தீபா இங்கே தான் இருப்பார் என்று ஐஸ்வர்யா கோவிலுக்கு வருகிறாள்.

வசமாக மாட்டிய ஐஸ்வர்யா: அதே போல ஐஸ்வர்யாவை துரத்தி வந்த போலீசார், ஆசிரமத்திற்கு வந்து ஐஸ்வர்யா என்ன கேட்டார் என்று விசாரிக்க, செக்யூரிட்டி தீபா குறித்து கேட்டார்கள், நான் கச்சேரி நடக்கும் இடத்திற்கு சென்றாக சொன்னதாக சொல்ல, போலீசார் ஐஸ்வர்யாவை தேடி செல்ல,வழியில் வேன் பழுதாகி நிற்பதை பார்த்து விட்டு,அவர்களும் கோவிலில் தான் இருப்பாள் என்று கோவிலுக்குள் செல்கின்றனர்.

போலீஸ் கஸ்டடியில் கார்த்திக்: அடுத்து கார்த்திக்கை போதை பொருள் தடுப்பு பிரிவினர் அழைத்து வர விசாரிக்க, கார்த்திக் எவ்வளவு எடுத்து சொல்லியும் போலீசார் அவர் பேசுவதை கேட்க மறுக்கின்றனர். உடனே கார்த்திக் இன்ஸ்பெக்டர் சரவணனை உதவிக்கு கூப்பிட, சரவணன் வந்து மேல் அதிகாரியிடம், கார்த்திக் என் நண்பன் தான் என்று சொல்லியும், அதிகாரிகள் கார்த்திக் வெளியில் விட மறுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X