செம கடுப்பா இருக்கு.. முடிச்சிவிடுங்கப்பா.. கார்த்திகை தீபம் சீரியலால் கடுப்பான ஃபேன்ஸ்!
சென்னை: நேற்றைய எபிசோடில், போலீஸ் கஸ்டடியில் இருந்து வெளியே வந்த கார்த்திக், இன்ஸ்பெக்டர் சரவணனிடம் தீபாவை எப்படியாவது பாட வைக்க வேண்டும் என சொல்கிறான். மேலும், சக்தி நர்ஸ் தீபாவை எப்படியாவது கூட்டிட்டு வருவாங்க அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என்றும் சொல்கிறான். அந்த நேரம் பார்த்து ஐஸ்வர்யா, கார்த்தியை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். கார்த்தியின் கண்ணில் படாமல் எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறாள்.
மறுபக்கம், மற்றொரு பக்கம், தீபாவுடன் சக்தி நர்ஸ் மற்றும் ஆசிரமத்திற்கு உள்ளவர்கள் அனைவரும் வந்து கொண்டிருக்க வேன் திடீரென பிரேக் பிடிக்காமல் போகிறது. டிரைவர் பிரேக் பிடிக்கவில்லை என்று சொல்ல உள்ளே இருந்த அனைவரும் பதற்றம் அடைகின்றனர். இதையடுத்து,வேன் தடுமாறி கட்டுப்பாடு இல்லாமல் ஒரு இடத்தில் மோதி நிற்க அனைவரும் உயிர் தப்புகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், வேன் விபத்தில் இருந்து தப்பியதை அடுத்து அனைவரும் மீண்டும் ஏறிவிட, ஒரு சிறுவனுக்கு மட்டும், பாத்ரூம் செல்ல இவர்கள் அவனை கவனிக்காமல் வேனை எடுத்துக்கொண்டு சென்று விடுகின்றனர். இதனால் அந்த சிறுவன் வழி தெரியாமல் நின்று கொண்டிருக்க அந்த வழியாக இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் கார்த்திக் வருகின்றனர்.
சிறுவன் தனியாக இருப்பதை பார்த்து விசாரிக்க அவன் ஆசிரமத்தில் இருந்து பாட்டுக் கச்சேரி நடக்கும் இடத்திற்கு செல்வதற்காக வந்ததாகவும் தன்னை விட்டு விட்டுச் சென்று விட்டதாகவும் சொல்கிறான். கார்த்திக் அந்த பாடகியின் பெயர் தீபாவா என்று கேட்க, அந்த சிறுவன், ஆமாம் என்று சொல்ல உன்னை நாங்க கூட்டிட்டு போறோம் என்று சொல்கிறான்.
நிம்மதி அடைந்த சக்தி: சக்தி நர்ஸ் திரும்பி வர வாய்ப்பு இருப்பதால் கார்த்திக் பக்கத்தில் இருக்கும் கடைக்காரனிடம் விஷயத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான். பிறகு சக்தி நர்ஸ் அந்த பையனை தேடி திரும்ப வர, அந்த சிறுவன் அந்த இடத்தில் இல்லாததால், வருத்தம் அடைகிறாள். எதற்கும் கடைக்காரரிடம் விசாரிக்கலாம் என்று சென்று விசாரிக்க, கடைக்காரர், விஷயத்தை சொல்ல கார்த்திக் தான் அழைத்துச் சென்ற விஷயத்தை அறிந்து நிம்மதி அடைகின்றனர்.
தப்பித்த துங்கா: மறுபக்கம் துங்காவை போலீஸ் விசாரணைக்காக அழைத்து வந்திருக்க துங்கா பசிக்கிறது என்று சொல்ல அவனை போலீஸ் கடைக்கு அழைத்து செல்லும்போது போலீசின் கவனத்தை திசை திருப்பி தப்பி செல்கிறான். கச்சேரி நடத்தும் இடத்தில் தீபா வருவாள் என்ற நம்பிக்கையுடன் அபிராமி குடும்பத்தினர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள். கடந்த மூன்று மாதமாக கார்த்திக் தீபாவை தேடி அலைந்து கொண்டே இருக்கிறார். இப்படியே எபிசோடு போவது செம கடுப்பாக இருக்கு, முடிச்சிவிடுங்கப்பா என நெட்டிசன்கள் இந்த சீரியலை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











