தீபா மீது கைவெச்சி பாருடா.. சவால் விட்ட கார்த்திக்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு அப்டேட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், தீபாவை தேடி அருண் மற்றும் கார்த்திக் ரோடு ரோடா நோட்டீஸ் ஒட்டிக்கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து, ஆசிரமத்தில், அருண் நோட்டீஸ், அங்கு இருக்கும் தீபாவை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. பின் அருண் கொடுத்த நோட்டீஸ் பறந்து வந்து தீபம் மற்றும் சக்தி இருக்கும் ரூமுக்குள் விழ, சக்தி அந்த நோட்டீசை பார்த்து விடுகிறாள்.

தீபாவை கண்டுபிடிக்க கார்த்திக் செய்த ஏற்பாடு தான் இது என வெளியே ஓடிவந்து பார்க்க அதற்குள் அருண், கார்த்திக் அங்கிருந்து கிளம்பி விடுகிறான். இதை வைத்து தீபா குறித்து கார்த்திக் சாருக்கு தகவல் கொடுக்கலாம் என முடிவெடுக்கும் சக்தி மேனேஜரிடம் கார்த்திக் நம்பரை கேட்கிறாள். ஆனால், அதற்கு முன்பே ரௌடி துங்கா, அவரை மிரட்டி, யாராவது கார்த்திக் நம்பர் கேட்டா என்னுடைய நம்பர் தான் கொடுக்க சொல்லி மிரட்டி விடுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக்கின் நம்பரை வாங்கிய சக்தி, அந்த நம்பருக்கு போன் செய்து பேசுகிறாள். ஆனால், துங்கா கார்த்திக் போல பேசி அவளை ஒரு இடத்திற்கு வர சொல்லுகிறான். இதையடுத்து, நர்ஸ் அந்த இடத்திற்கு வந்து மறைந்து நிற்கிறாள். அப்போது, துங்காவும் ஐஸ்வர்யாவையும் பார்த்துவிடுகிறாள். இது இவர்களின் வேலை என்பதை தெரிந்து கொண்ட நர்ஸ் ஷக்தி.

அவனுக்கு தெரியாமல் மீண்டும் ஆசிரமத்திற்கு சென்று வந்த சக்தி. தீபாவை எல்லா இடத்திலும் துங்கா தேடுகிறான். இனிமே தான் நாம தீபாவை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இந்த தீபாவிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. ஐஸ்வர்யா ஏன் தீபாவை கொல்ல துடிக்கிறாள்.இந்த விஷயத்தை நாம நிச்சயம், கார்த்திகை பார்க்கும் போது சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.

சவால் விட்ட கார்த்திக்: அடுத்ததாக, ஐஸ்வர்யா சொன்னபடி கார்த்திக்கிற்கு போன் பண்ணும் துங்கா, முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும். நான் சொல்லுற இடத்திற்கு வா என்று சொல்ல கார்த்தி, அருண் ஆகியோர் அந்த இடத்திற்கு வருகின்றனர். அப்போது, துங்கா, நான் சொல்லுவதை கேளு உனக்கு தீபா வேண்டும், எனக்கு கீதா வேணும். இதுல நாம ஏன் சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறோம். ஒழுங்கா கீதாவை என்னிடம் கொடுத்துவிடு என்கிறான். அப்படி நீ கொடுக்கவில்லை என்றாலும் நான் கண்டிப்பா கீதாவை தூக்குவேன் அவ எனக்கு பண்ணதை திருப்பி பண்ணுவேன் என்று துங்கா கோவத்துடன் பேசுகிறான். உடனே கார்த்திக், உன்னால கீதாவை எதுவும் பண்ண முடியாது, தீபாவையும் எதுவும் பண்ண முடியாது. உன்கிட்ட இருந்து அவங்கள காப்பாத்தி தரேன்னு நான் வாக்கு கொடுத்து இருக்கேன் என்று கார்த்திக் துங்காவிடம் சவால் விடுகிறான்.

வருத்தப்படும் கார்த்திக்: இதையடுத்து வீட்டுக்கு வந்த கார்த்திக் கீதாவிடம் நடந்த விஷயத்தை சொல்ல கீதா நம்மால ஏதாவது பண்ண முடியுமா என்று சந்தேகத்துடன் கேட்க கார்த்தி தீபாவை நினைத்து வருந்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X