பலே ஆளுயா கார்த்திக்.. மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் !
சென்னை: நேற்றைய எபிசோடில், துங்காவிடம் சவால்விட்டு விட்டுகார்த்திக் வீட்டுக்குவர, அபிராமி,தர்மலிங்கம் அனைவரும் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது, அபிராமி தீபா பற்றி எதாவது தகவல் கிடைத்ததா என்று கேட்க, இல்லமா என்கிறான். அப்போது, வருத்தப்படாத கார்த்திக், மக்கள் கூடும் எல்லா இடத்திலும் நோட்டீஸ் ஒட்டி இருக்கோம் என்றார்.
வீட்டுக்கு வந்த கார்த்திக் கீதாவிடம் நடந்த விஷயத்தை சொல்ல கீதா நம்மால ஏதாவது பண்ண முடியுமா என்று சந்தேகத்துடன் கேட்க, நிச்சயம் பண்ணலாம் என்கின்றனர். ஐஸ்வர்யா மீது ஏதோ சந்தேகமாகவே இருக்கிறது என்பதால் அவளை மடக்கி பிடித்து உண்மையை வர வைக்க முடிவெடுக்கிறான். இதையடுத்து, இருவரும் சேர்ந்து கொண்டு, ஐஸ்வர்யா குறித்து பிளான் போடுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் அபிராமிக்கு போன் செய்து தீபா கிடைத்து விட்டதாக சொல்ல குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷம் அடைந்து வீட்டுக்கு வந்த கீதாவை ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கின்றனர். இதையடுத்து, கீதா வீட்டிற்கு வந்ததும், நான் தனியாக ஐஸ்வர்யாவிடம் பேச வேண்டும் என்று சொல்ல, அபிராமி எதுக்கு வந்ததும், ஐஸ்வர்யா கூட பேசணும் இவ எதாவது பண்ணாள என்று கேட்க இல்லை அத்தை, நான் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஐஸ்வர்யா, கீதா இருவரும் அறைக்குள் செல்கின்றனர்.
ஐஸ்வர்யாவிடம் பேசிய கீதா: அப்போது, கீழே அனைவரும் அமர்ந்து இருக்கு, கார்த்திக் அபிராமியிடம் வந்திருப்பது தீபா இல்ல கீதா தான்.. ஐஸ்வர்யா அண்ணி எதையோ மறைக்கிறாங்க அவங்க கிட்ட இருந்து உண்மையை கொண்டு வரத்தான் இப்படி பண்ணி இருக்கேன் என்று சொல்கிறான். ஐஸ்வர்யா உடன் சென்ற கீதா கார்த்திக்குடன் போனில் லைனில் இருக்கிறான்.
வசமாக மாட்டிய ஐஸ்வர்யா: ரூமுக்குள் வந்தது தீபா அன்னைக்கு மலையிலிருந்து என்ன புடிச்சு தள்ளும் போது நீங்களும் அங்க இருந்து இங்க எதுக்காக இப்படி பண்ணீங்க உண்மைய சொல்லுங்க என்று கேட்க ஐஸ்வர்யா அதிர்ந்து போகிறாள். உன் மேல இருந்த கோவத்துல புத்தி கெட்டுப் போய் இப்படி பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு என்று சொல்கிறாள். ஐஸ்வர்யா பேசியதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











