தீபா, கார்த்திக்கை பிரித்து கடவுள் ஆடும் விளையாட்டு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், நர்ஸ் சக்தி ஹாஸ்பிடலில் தீபாவை அட்மிட் செய்த பெண்மணியின் முகவரியை வாங்கிக் கொண்டு அவள் வீட்டுக்கு வந்து தீபா குறித்து விசாரிக்க அந்த பெண்ணை, நான் தான் ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணேன். ஆனா அவங்க சொந்தக்காரங்க யாரு என்ன என்பது எனக்கு தெரியல என்று சொல்லிவிட சக்தி ஏமாற்றம் அடைகிறாள்.
மேலும், நர்ஸ் சக்தி, தீபா ஒரு பாடகி என்பதால் அவரைப் பற்றி எப்எம் ரேடியோவில் தகவல் கொடுக்கலாம் என்று சொல்லி ஒரு எப்எம் ரேடியோ ஸ்டேஷன் வந்து மேனேஜரை சந்தித்து பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்து, இறுதியாக தீபா குறித்த விஷயத்தை fm-யில் பதிவு செய்து தொடர்புக்கு தன்னுடைய நம்பரையும் கொடுக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், தீபாவை தேடி வந்த கார்த்திக் மற்றும் எஸ்ஐயும் ஓரு ஓட்டலில் ஜூஸ் குடித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, அந்த எஸ்ஐ, இந்த துங்கா மட்டும் வராமல் இருந்து இருந்தா, தீபா ஹாஸ்பிடல்லதான் இருந்து இருப்பாங்க அவன் வந்து மொத்தத்தையும் கெடுத்துவிட்டான் என்று புலம்கிறான். உடனே கார்த்திக், நடந்ததை பற்றி பேசி என்ன பண்றது, அந்த ரௌடி கண்ணில் படுவதற்குள் தீபாவை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான்.
விதி செய்யும் சதி: அதே ஓட்டலில் தான் நர்ஸ் சக்தியும் ஜூஸ் ஆடர் செய்து இருக்கிறாள்.ன ஆனால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாவில்லை. அதன் பிறகு நர்ஸ் சக்தி எஃப்எம் ரேடியோவிற்கு ஃபோன் போட்டு, தீபா பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என்று விசாரிக்க மேனேஜர் இன்னும் எதுவும் கிடைக்கல கண்டிப்பா உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் என்று சொல்லி போனை வைக்கிறார். அதன் பிறகு கார்த்திக், எஸ்ஐயும் ரெஸ்டாரன்டில் இருந்து கிளம்ப, நர்ஸ் சக்தி, கார்த்திகையை பார்த்து விடுகிறாள்.
இவர் தானே நம்ம வீட்டுக்கு தீபாவை தேடி வந்தவர், தீபாவோட கணவர் என்று தெரிந்து, கார்த்திக்கை கூப்பிட கார்த்திக் காரை எடுத்துவிட்டு கிளப்பி விடுகிறான். நர்ஸ் கார் பின்னால், பின் தொடர்ந்து ஓடி வர கார்த்திக் கவனிக்கவில்லை. திடீரென யாரோ உன் தொடர்ந்து வந்தது போல உனக்கு திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லாததால் ஒருவரை ஒருவர் பார்க்கமுடியாமல் போய்விடுகிறது.
அலறி துடித்த ஐஸ்வர்யா: மறுபக்கம் அபிராமி வீட்டில் வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யா வீட்டில் இருப்பது தீபாவை கிடையாது கீதா என்ற உண்மையை போட்டு உடைக்க கீதாவும் ஆமாம், நான் கீதா தான் என்று ஒப்புக்கொள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதன் நேரத்தில் கார்த்திக் தீபாவுடன் வீட்டுக்குள் நுழைய தீபா ஐஸ்வர்யா தான் தன்னை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டது என்ற உண்மையை உடைக்க அனைவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர். ஐஸ்வர்யா என்னை கைது பண்ணிடாதீங்க என்று அலறி துடிக்க அது அவளது கனவு என்று தெரிய வருகிறது. அருண் என்ன ஆச்சு என்ன உளறிட்டு இருக்க என்று கேட்க அவனை சமாளிக்கிறாள்.
அதைத்தொடர்ந்து எஃப் எம்-ல் தீபா குறித்த அறிவிப்பு வெளியாகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











