ரௌடியை பார்த்து ஆடி போன கீதா..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோட்டில், மயக்கத்தில் இருக்கும் தீபா, கார்த்திக் ... கார்த்திக் என்று புலம்பிக்கொண்டு இருக்க, அதைப்பார்த்த நர்ஸ், அன்னைக்கே கார்த்திக் உங்களை தேடி வந்தார். நான் தான் என் முன்கோபத்தால், அவரை அனுப்பிவிட்டேன் என்று வருத்தப்படுகிறாள். எப்படியும், எப்.எம்.மில் நான் கொடுத்த தகவலைப் பார்த்து யாராவது நிச்சயம் வருவாங்க, உங்களை நான் கண்டிப்பா கார்த்திக்கிடம் ஒப்படைப்பேன் என்ற நர்ஸ் சக்தி மனதிற்குள் பேசிக்கொண்டு இருக்கிறாள்.

இன்றைய எபிசோடில், நர்சின் போன் நம்பர் துங்காவிற்கு கிடைத்துவிட, அவன் அவளுக்கு போன் செய்து, ஒழுங்கா கீதாவை என்னிடம் ஒப்படைத்துவிடு என்று மிரட்டுகிறான். அப்போது, நர்ஸ், நான் சொல்லுவதை கேளுங்க அவங்க கீதா இல்ல, தீபா பாடகி, நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்கிறாள். அப்போதும் அதை கேட்காத துங்கா, யாருக்கிட்ட கதை சொல்ற என்று சொல்ல, கடுப்பான நர்ஸ் போனை கட் செய்துவிட, கோவத்தின் உச்சத்திற்கு சென்ற துங்கா, இந்த நர்சை சும்மா விடக்கூடாது,வா இவளை போய் தேடலாமா என்று வண்டியை எடுத்துக்கொண்டு புறப்படுகிறான்.

zee tamil televisionpa Karthigai Deepam serial september 22nd Episode full review

ஏமாந்த நர்ஸ்: அப்போது எப்எம் ரேடியோவில் இருந்து தீபா குறித்த தகவலை aௌ ஒருவர் சொல்ல வருவதாக சொல்ல சக்தி கிளம்பி எப்எம் ரேடியோவிற்கு செல்கிறாள். சம்பந்தப்பட்ட நபர் வரும் வழியில் துங்காவின் காரில் மோதி விபத்துக்குள்ளாகி வர முடியாமல் போகிறது. இதனால் சக்தி ஏமாற்றம் அடைகிறாள். அதே நேரத்தில் அவனுக்கு கார்த்திக் என்பவர், தீபாவின் கணவர் ஒரு ஆடியோ கம்பெனி வைத்திருக்கிறார் என்பதும் தெரிய வர அந்த கம்பேனிக்கு கிளம்பி செல்கிறாள்.

வீட்டிற்கு வரும் துங்கா: அடுத்து, துங்கா எதிர்பாராத விதமாக ஆனந்தை சந்திக்கிறாள் இருவரும் நண்பர்கள் என தெரிய வருகிறது. அப்போது ஆனந்த் சென்னைக்கு வந்தினா போன் பண்ண மாட்டியா என்று கேட்க, அவசர வேலையாக வந்ததால் சொல்ல முடியவில்லை என்று சொல்லி சமாளிக்கிறான் துங்கா. சரி வீட்டிற்கு போகலாம் என்று சொல்லி துங்காவை வீட்டிற்கு ஆனந்த் அழைத்து வருகிறான். துங்காவை வீட்டுக்கு ஆனந்த் அழைத்து வந்ததைப் பார்த்து பதறிப்போன கீதா, யாருக்காக பயந்த இந்த வீட்டில் இருக்கிறோமோ அவனே இங்கு வந்து இருக்கானே, என்ன செய்வது என்று தெரியவில்லையே, கார்த்திக் இந்த நேரம் பார்த்து வீட்டில் இல்லை என புரியாமல் கீதா, பாத்ரூமில் ஒளிந்து கொள்கிறாள்.

இதைதொடர்ந்து, ஆனந்த் குடும்பத்தினர் அனைவரையும் துங்காவிற்கு அறிமுகம் செய்து வைக்க கடைசியாக தீபாவை கூப்பிட தீபா ரெஸட் ரூமில் இருப்பதாக பொய் சொல்லி தப்பிக்கிறாள்‌. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X