மீண்டும் ஆபத்தான நிலையில் தீபா.. எதிர்பாராத திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ஆசிரமத்தில் இருக்கும் தீபாவிற்கு காய்ச்சல் அதிகமாக, நர்ஸ் சக்தி, டாக்டரிடம் தனது உறவுக்கார பொண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி என்ன ட்ரீட்மென்ட் கொடுப்பது என்று விசாரிக்க அவர் சில வழிமுறைகளை சொல்ல அதை செய்தும் அவளுக்கு காய்ச்சல் குறையவில்லை. இதனால் டாக்டர் அந்த பெண்ணை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர சொல்ல வேறு வழியில்லாமல், தீபாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறாள்.

மறுபக்கம், அபிராமி கார்த்திக்கு தீபாவுக்கு கண் எதிரே கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என்று திட்டமிட அபிராமி விஷயத்தை சொல்லாமல் எல்லாரையும் கோவிலுக்கு அழைத்து வருகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: ஷக்தி நர்ஸ் தீபாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறாள். தீபாவை பரிசோதனை செய்த டாக்டர் அவங்க ரொம்ப வீக்காக இருக்காங்க என்று சொல்கிறார். பிறகு ஷக்தி மீண்டும் தீபாவை அழைத்து கொண்டு அதே ஆட்டோவில், கார்த்திக்கோட மியூசிக் கம்பெனிக்கு வந்து கார்த்திக்கை பார்க்க வேண்டும் என்று விசாரிக்க கார்த்திக் சார் இல்ல, அவரோட அண்ணன் அருண் தான் இருப்பதாக சொல்கின்றனர். ஷக்தி அருணை, பார்த்து விஷயத்தை சொல்லலாம் என்று காத்திருக்கிறாள். அந்த நேரம் பார்த்து, அருணை கோவிலுக்கு அழைத்து செல்ல ஆபிஸ் வருகிறாள் ஐஸ்வர்யா.

எஸ்கேப்பாகும் நர்ஸ்: ஐஸ்வர்யாவை பார்த்த ஷக்தி மறைந்து கொள்கிறாள். ஐஸ்வர்யா உள்ளே வந்து அருணை அழைக்க அவன் என்ன பார்க்க நர்சக்தினு யாரோ வந்திருக்காங்களாம். அவங்க வெளியே தான் இருக்காங்க, கூட்டிட்டு வா பார்த்துட்டு போய்டலாம் என்று சொல்ல ஷக்தி என்ற பெயரை கேட்டதும் ஐஸ்வர்யா ஷாக்காகி வெளியே வர அதற்குள். ஷக்தி அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகின்றனர். இதை ஐஸ்வர்யா சிசிடிவியில் பார்த்துவிட்டு துங்காவிற்கு தகவல் கொடுக்க அவன் ஆட்டோவை பின்தொடர்ந்து செல்கிறான்.

நடக்கப்போவது என்ன: இதனால் ஷக்தி தீபாவை ஒரு கோவிலுக்குள் மறைத்து வைக்கிறாள், இதே கோவிலுக்கு தான் அபிராமி எல்லாரையும் அழைத்து வந்திருக்கிறாள். கோவிலில், அபிராமி கழுத்தில் தாலி கட்டும்படி சொல்ல, கார்த்திக் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லுகிறான். அந்த நேரத்தில் கீதா என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருக்கிறாள். அப்போது, மீனாட்சி மற்றும் மைதிலி இருவரும், கார்த்திக், தீபா தான் உங்க கையால் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள் என்று சொல்கின்றனர். அந்த நேரத்தில் வேறுவழியே இல்லாமல், இது தீபா இல்ல, தீபா போலவே இருக்கும் கீதா என்று சொல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது.

விதி விளையாடிய விளையாட்டு: மலையில் இருந்து விழுந்த தீபா காணும், அவ எங்கையோ இருக்கா, அவளை தேடிக்கொண்டு இருக்கிறேன். அம்மாவிற்காகத்தான் கீதாவை தீபா மாதிரி நடிக்க வைத்தேன் என்று சொல்கிறான். அப்போது,அபிராமி என்ன கார்த்திக் இவ்வளவு பெரிய விஷயத்தை மறச்சிட்டியே என்று புலம்புகிறாள் அபிராமி. அந்த நேரம், உங்களை காப்பாற்ற எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சொல்கிறான். அப்போது அபிராமி, கவலைப்படாத கார்த்திக்,தீபா கிடைத்துவிடுவாள் என்கிறார். அப்போது, கோவிலில் தீபா மயக்கத்தில், யாரும் பார்க்காமல் அங்கிருந்து கிளப்புகின்றனர்.

வீட்டில், அபிராமி, கீதாவின் அவள் பற்றி விசாரிக்க அனைத்து விஷயத்தையும் சொல்லுகிறாள். அப்போது, அபிராமி, தீபா இந்த வீட்டு பெண்ணு, அவளை மாதிரியே நீயும் இருப்பதால், நீயும் எங்க வீட்டு பெண்ணு தான், தீபாவிற்கு இந்த வீட்டில் எந்த அளவிற்கு மரியாதை இருக்கோ அந்த அளவிற்கு உனக்கும் மரியாதை இருக்கு என்று சொல்ல, அபிராமியின் அன்பைப் பார்த்து கீதா கண்கலங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X