கீதா கழுத்தில் தாலி கட்டினாரா கார்த்திக்.. கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோட்டில், நர்ஸ் ஹாஸ்பிடலுக்கு தீபாவை பரிசோதனை செய்ய அழைத்து வருகிறாள். டாக்டர் தீபா, ரொம்ப வீக்காக இருக்காங்க என்று சொல்கிறார். பிறகு ஷக்தி மீண்டும் தீபாவை அழைத்து கொண்டு அதே ஆட்டோவில், கார்த்திக்கோட ம்யூசிக் கம்பெனிக்கு வந்து கார்த்திக்கை பார்க்க செல்கிறாள். ஆனால், அங்கு ஐஸ்வர்யா இருக்க ஷக்தி மறைந்து கொள்கிறாள்.

ஷக்தி வந்ததை சிசிடிவியில் பார்த்துவிட்ட ஐஸ்வர்யா, துங்காவிற்கு தகவல் கொடுக்க அவன் ஆட்டோவை பின்தொடர்ந்து செல்கிறான். இதைப்பார்த்த பயந்த ஷக்தி, கோவிலில் மறைந்து கொள்கிறாள். இந்த நேரத்தில், கோவிலில் அபிராமி எல்லாரையும் அழைத்து கார்த்திக், தீபாவிற்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறாள். இதையடுத்து இன்று நடப்பதைப் பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திக் தீபம்: இன்றைய சீரியலில், கோவிலில் அனைவரும் அருண் வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். அருண் வந்ததும், அபிராமி கையில் இருக்கும் தாலியை கொடுத்து பூஜை செய்ய சொல்ல, கீதா, என்ன கார்த்திக் அம்மா தாலியை கொடுக்கிறார்கள். தாலி கட்ட சொல்லிடுவாங்க போல என்று சொல்ல, எனக்கும் தெரிய கீதா, அமைதியா இரு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். என்னை நம்பு என்று சொல்கிறான்.

குழப்பத்தில் நர்ஸ்: அதே கோவிலின் மறுபக்கம் ஷக்தி, தீபாவை மறைத்து வைத்து இருக்கிறாள் கோவிலில் ஏதோ திருணம் போல என அதைப்பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ஆனால், அவள் கண்ணுக்கு தெரியாதபடி கார்த்திக், கீதா நின்றபதால் நர்ஸ் சக்தியால் அவர்களை பார்க்க முடியவில்லை. மேலும், துங்காவிடம் இருந்து, தீபாவை எப்படி காப்பாற்றுவது என்று தெரியலையே, என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு இருக்கிறாள்.

கீதா கழுத்தில் தாலி கட்டினாரா கார்த்திக்: பூசாரி, தாலியை பூஜை செய்து கொடுத்ததும்,அபிராமி கழுத்தில் தாலியை எடுத்து கார்த்திக்கிடம் கொடுத்து கட்டும்படி சொல்ல, கார்த்திக் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லுகிறான். அந்த நேரத்தில் கீதா என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருக்கிறாள். அப்போது, மீனாட்சி மற்றும் மைதிலி இருவரும், கார்த்திக், தீபா தான் உங்க கையால் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள் என்று சொல்கின்றனர்.

உண்மைதான், ஆனால் இப்போது கல்யாணம் வேண்டாம், நான் இப்படி சொல்கிறேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும், தயவு செய்து இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல, அதுவும் சரிதான் ஆனால், காரணம் என்ன என்று அபிராமி கேட்க, வேறுவழியே இல்லாமல், இது தீபா இல்ல, தீபா போலவே இருக்கும் கீதா என்று சொல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது.

தீபாவை தேடுகிறேன்: மலையில் இருந்து விழுந்த தீபா காணும், அவ எங்கையோ இருக்கா, அவளை தேடிக்கொண்டு இருக்கிறேன். அம்மாவிற்காகத்தான் கீதாவை தீபா மாதிரி நடிக்க வைத்தேன், அந்த நேரத்தில் எனக்கு வேறு வழி தெரியவில்லை சொல்கிறான். அப்போது அபிராமி, அய்யோ என் தீபாவிற்கு என்ன ஆச்சு என்று கண்கலங்குகிறாள். மேலும், கவலைப்படாத கார்த்திக், தீபா கிடைத்துவிடுவாள் என்கிறாள்.

பின் என்னை மன்னித்துவிடு கீதா, நீ தீபா என்று நினைத்துத்தான் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தேன் என்று மன்னிப்பு கேட்கிறாள். சரி இந்த இடத்தில் எதையும் பேச வேண்டாம் வாங்க வீட்டுக்கு போகலாம் என்று அனைவரும் கிளப்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X