தப்பான முடிவு எடுத்த கீதா.. வில்லனை ஓடவிட்ட கார்த்தி.. கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், தீபா நல்லபடியாக வீடு திரும்பி வரவேண்டும் என அபிராமி கோவிலுக்கு வந்து தீச்சட்டி எடுக்க கார்த்திக் உட்பட எல்லோரும் அது வேண்டாம் என தடுக்கின்றனர். ஆனால், அபிராமி,நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன். யாரும் என் மனசை மாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டு தீச்சட்டி எடுக்கிறாள்.
தீபாவுக்காக மொத்த குடும்பமும் காத்திருப்பதை பார்த்த கீதா நான் இந்த வீட்ல இருக்கிற வரைக்கும் தூங்கா நிச்சயம் தீபாவை விட மாட்டான். தீபா நல்லபடியாக இந்த வீட்டுக்கு திரும்ப வரணும்னா நான் துங்காவிடம் சரணடைவது சரி என முடிவெடுக்கிறாள். இதையடுத்து, கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டு ஒரு லெட்டர் எழுதுகிறாள் இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அபிராமியை பார்க்க வரும் கீதா, எனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டி இருக்கு நான் கடை வரைக்கும் போய் வருகிறேன் என்று சொல்ல, அபிராமி அதெல்லாம் வேண்டாம் என்ன வேண்டுமோ கார்த்திக்கிடம் சொல்லு, வெளியில் உன்னை கொல்ல துங்கா காத்துக்கிட்டு இருக்கான் என்று சொல்கிறாள். இல்ல ஆண்டி பக்கத்துலத் தான் எனக்கு ஒன்னும் ஆகாது என்று சொல்லிவிட்டு, அனைத்திற்கும் நன்றி, நான் போனாத்தான் உங்க மருமகள் தீபா வீட்டிற்கு வருவாள் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே வெளியில் சென்றுவிடுகிறாள்.
ஐஸ்வர்யாவிடம் சிக்கிய லெட்டர்: கீதா, ஏதோ எழுதிக்கொண்டு இருந்ததை பார்த்துக்கொண்டு இருந்த ஐஸ்வர்யா, ரூமுக்கு போய் அந்த லெட்டரை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். கீதா துங்காவிடம் சரணடைந்தால் அவன் தீபாவை விட்டு விடுவான். அதனால நமக்கு தான் ஆபத்து. அதனால் இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என முடிவெடுக்கும் ஐஸ்வர்யா, அபிராமியிடம் அத்தை, கீதா லெட்டரை எழுதி வைத்து விட்டு துங்காவை பார்க்க சென்றுவிட்டதாக என சொல்கிறாள்.
கீதாவை காப்பாற்றிய கார்த்தி: இந்த நேரத்தில்,கீதா வர, வா கீதா என் தம்பியை கொன்னுட்டு தப்பிச்சிடலாம்னு நினைச்சியா என்று கேட்க, உன் தம்பி ஒன்னும் நல்லவன் இல்லை, அவன் என் தங்கச்சியை கொன்னான் நான் அவனை கொன்னேன் என்று என்று சொல்ல. ஓ என்கிட்டேயே நீ திமிரா பேசுறியா? இப்போ, நான் உன்னையே கொல்ல போறேன் என்று சொல்லிக்கொண்டு, கீதாவை குத்த வர அங்கே என்ட்ரி கொடுத்த கார்த்திக், துங்காவை அடித்துப்போட்டுவிட்டு கீதாவை காப்பாற்றி செல்கிறான்.
மகிழ்ச்சியில் துங்கா: மறுபக்கம், துங்கா, ஏய் கீதா எப்படி நீயா என் வழிக்கு வந்த பாத்தியா என்று சொல்லி, சந்தோஷத்தில் சிரித்துக்கொண்டு இருக்கிறான். அப்போது, ஒரு அடியாள், அண்ணே இத்தனை நாளா, நாம கீதாவை தேடி போனோம். அப்போ எல்லாம் எஸ்கேப்பான கீதா, இப்போ எப்படி போன் செய்து,நானே வரேன் என்று சொன்னா, எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு என்று சொல்கிறான். டேய், இந்த துங்காவை நீ சாதாரண ஆளுனு நினைச்சியா, துங்கா நம்மை சும்மா விடமாட்டான் என்று கீதாவிற்கு நல்ல தெரியும், அதான் அவளா போன் செய்து, உயிர்பிச்சை கேட்கவர என்று சொல்லி சிரிக்கிறான்.
கீதாவை காப்பாற்றிய கார்த்தி: இந்த நேரத்தில்,கீதா வர, வா கீதா என் தம்பியை கொன்னுட்டு தப்பிச்சிடலாம்னு நினைச்சியா என்று கேட்க, உன் தம்பி ஒன்னும் நல்லவன் இல்லை, அவன் என் தங்கச்சியை கொன்னான் நான் அவனை கொன்னேன் என்று என்று சொல்ல. ஓ என்கிட்டேயே நீ திமிற பேசுறியா? இப்போ, நான் உன்னையே கொல்ல போறேன் என்று சொல்லிக்கொண்டு, கீதாவை குத்த வர அங்கே என்ட்ரி கொடுத்த கார்த்திக், துங்காவை அடித்துப்போட்டுவிட்டு கீதாவை காப்பாற்றி செல்கிறான்.
அப்போது துங்காவின் அடியாள், அண்ணே, அந்த நர்ஸ் சொன்ன மாதிரி அது தீபா தான். இதுதான் உண்மையான கீதா. அந்த ஐஸ்வர்யா நம்மை நல்ல ஏமாத்தி இருக்கா என்று சொல்கிறான். ஆமாம் டா நீ செல்லுவது தான் சரி, இவதான் உண்மையான கீதா என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











