கியரை மாற்றுது ஜீ தமிழ் டிவி சேனல்.. ப்ரமோ வீடியோக்களை பார்த்தீங்களா?

சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சேனலும் ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொண்டு நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிலையில் தற்போது IPL போட்டி முடிவடைந்த, நிலையில் இனி சேனலில் எல்லா சீரியலிலும் சிக்ஸர் தான் என்பது போல ஆட்டம் ஆரம்பம் என்ற பெயரில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், ஐபிஎல் போட்டிக்கு டாஸ் போடுவது போல, மாத்திடு சேனலை ஜீ தமிழ் பக்கம் என்று புதிய அட்டகாசமான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

Zee Tamil Ninaithen Vandhai television

புது ப்ரோமோ: இந்த ப்ரோமோ வீடியோ நினைத்தேன் வந்தாய் சீரியலில் அடுத்து சுடர், எழில் இருவரும் ஒன்னுதான், இருவரும் ஜோடி சேர போவதாகவும் பேயாக வந்துள்ள இந்துவால் நடக்க போவது என்ன? என்ற நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்களுடன் உங்களை கவர அடுத்தடுத்து எபிசோடுகளில் வெளியாக உள்ளது. அதே போல் வீரா சீரியலில் ராமசந்திரன் குடும்பத்தை பழிவாங்க வந்துள்ள கண்மணியை வீரா எப்படி சமாளிக்க போகிறாள்? அடுத்து என்ன என்ற கோணத்தில் கதைக்களம் நகர போவதாகவும் தெரிய வந்துள்ளது.

அடுத்தடுத்த திருப்பங்கள்: அண்ணா சீரியலில் ஒரு தங்கையை கரை சேர்த்த ஷண்முகம் மற்ற தங்கைகளை எப்படி கரை சேர்க்க போகிறான்? பெயிலில் வெளிவர போகும் சூடாமணியால் சௌந்தரபாண்டிக்கு வர போகும் சிக்கல் என்ன என்ற அதிரடியான திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் சந்தியா ராகம் சீரியல் சீனு, மாயா திருமணத்தை நோக்கி நகர உள்ள நிலையில் ஜானகி எடுக்க போகும் முடிவு என்ன? ஜெயிக்க போவது மாயாவின் காதலா? ரகுராமன் குடும்ப கௌரவமா? 20 வருடத்திற்கு பிறகு சந்தியாவால் நடந்த சம்பவம் மீண்டும் மாயாவால் நடக்க போவதால் அடுத்து என்னவாகும் என்ற விறுவிறுப்பான திருப்பங்களால் மக்களை கவர உள்ளது. இதனால் இனி எல்லாமே நினைத்தாலே இனிக்கும் என்ற வார்த்தைகளுடன் அட்டகாசமாக ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X