ஜீ தமிழ் வழங்கும் திருமதி ஹிட்லர் ..மாடர்ன் மாமியாரின் அட்ராசிட்டிஸ் ஆரம்பம் !

சென்னை : ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் HD சேனல்களில் திருமதி ஹிட்லர் என்ற தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.பல விதமான காட்சி அமைப்புகளுடன் ப்ரோமோ வீடியோஸ் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது

தனித்துவமான நிகழ்ச்சிகளுக்காகவும், முற்றிலும் மாறுபட்ட தொடர் கதைகளுக்காகவும் பெயர்பெற்ற முன்னணி தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழ் இருந்து வருகின்றது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக நேயர்களால் பெரிதும் விரும்பப்பட்டும், அவர்கள் இல்லங்களில் கொண்டாடப்பட்டும் வருகிறது.

டைம் பாஸ்க்கு பஞ்சமில்லை

டைம் பாஸ்க்கு பஞ்சமில்லை

நேயர்களை மகிழ்விக்கவும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் ஒரு புத்தம் புதிய உற்சாகமானத் தொடரை ஜீ தமிழ் கொண்டு வருகிறது. தமிழகத்தின் இளம் மாமியார் - திருமதி ஹிட்லர். வரும் டிசம்பர் 14, 2020 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6:30 - 7:00 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் HD சேனல்களில் திருமதி ஹிட்லர் ஒளிபரப்பாகவுள்ளது.

திருமதி ஹிட்லர்

திருமதி ஹிட்லர்

துறுதுறுப்பான அழகிய இளம் பெண்ணான ஹாசினியை சுற்றி நிகழும் சுவாரஸ்யமான குதூகலமிக்க நிகழ்வுகளை சொல்லும் தொடர் தான் இந்த திருமதி ஹிட்லர். தன்னால் முடியாது என்று ஒருவர் தன் திறமைக்கு சவால் விடுத்தால், அந்த சவால்களைத் தகர்த்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஹாசினியின் கதாப்பாத்திரத்தில் கீர்த்தனா பொடுவால் நடிக்கிறார்.

அசத்தும் நடிப்பு

அசத்தும் நடிப்பு

இவரது குணாதிசயத்திற்கு முற்றிலும் நேர் எதிராகவும், எதிலும் நூறு சதவிகிதம் சரியாக இருக்க வேண்டுமென நினைக்கிறார் - ஏஜே என்று அழைக்கப்படும் அபினவ் ஜனார்தன். தன் உயர்தர வாழ்க்கை முறையை மற்றவரும் பின்பற்ற வேண்டும், தன்னைப் போலவே அவர்களும் முறையாக வாழவேண்டுமென சுற்றி உள்ளவர்களுக்கு அறிவுறுத்துபவர் அபினவ்.

நகைச்சுவைக்கு பஞ்சமில்லை

நகைச்சுவைக்கு பஞ்சமில்லை

கதையின் போக்கில் இருவருக்கும் இடையில் ஒரு சிக்கலான காதல் ஏற்பட; ஹாசினி தன்னைவிட அதிக வயதுள்ள மருமகள்கள் மூவருக்கு மாமியாராக அதனைத் தொடர்ந்து நகைச்சுவையான பல சுவாரஸ்யங்களுடன் கதை செல்கிறது. நிச்சயம் இது நேயர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் ஒரு தொடராக இருக்கும்.

தெரிந்த முகங்கள்

தெரிந்த முகங்கள்

பிரபல நடிகர் அமித் பார்கவ் ஏஜே கதாப்பாத்திரத்தில் நடிக்க, அவரது தாயாக நடிகை அம்பிகா நடிக்கிறார். பேராசிரியர் ஞானசம்பந்தம் கதாநாயகியின் தந்தையாக நடிக்கிறார். மேலும் கதாநாயகியின் மாற்றாந் தாயாக நடிகை கீர்த்தனாவும், சௌமியா, பவ்யா ஸ்ரீ மற்றும் சுப்பலக்ஷ்மி ஆகியோர் மருமகள்களாக நடிக்கின்றனர். ஆயிஷா அப்துல்லா & அர்மான் அப்துல்லா ஆகியோரது நிறுவனமான ஆயிஷ்மான் புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கும் இந்தத் தொடரை எஸ்.என்.ராஜ்குமார் இயக்குகிறார்.

புதுமை காணவேண்டும்

புதுமை காணவேண்டும்

நம் வாழ்க்கையையும், நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தையும் ஒரு இலகுவான மனநிலையோடும், புதுமையாகவும் காணவேண்டும் என்பதையே இந்த தொடர் முன்வைக்கிறது. வயது வேறுபாடுகளின்றி அனைத்து வயதினரையும் மகிழ்வித்து; இந்தப் புத்தம் புதிய நிகழ்ச்சி அவர்களுக்கு குதூகலத்தையும், உற்சாகத்தையும் வழங்கி மனதார சிரிக்க வைக்குமென்று நாங்கள் நம்புகிறோம்."

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X