மக்களை உற்சாகப்படுத்த கேம் ஷோ.. ஜி டிவியின் புதிய முயற்சி!
சென்னை : ஜி தமிழ் தொலைகாட்சி கொரன்டைன் நேரத்தில் மற்ற தொலைகாட்சிகளை போல் பழைய நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை ஒளிப்பரப்பி வருவதை தாண்டி புதிதாக மக்களை உற்சாகபடுத்த புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது.
Recommended Video

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு மக்களை வீட்டிலே பூட்டி வைத்து இருக்கிறது. மக்களின் பிரதான பொழுதுபோக்காக தொலைகாட்சி மாறியிருக்கும் இந்த நேரத்தில் தொலைகாட்சிகளும் புது சரக்கு ஏதும் இன்றி மக்களை மகிழ்விக்க தங்கள் கைவசம் இருக்கும் படங்களையும் நாடகங்களையும் ஒளிப்பரப்பி வருகின்றன.

இதே போல் 54நாட்களுக்கு மேல் செய்து வந்த ஜி தமிழ் தொலைகாட்சி கையில் புதிய யுக்தி ஒன்றை எடுத்துள்ளது. அது என்னவென்றால் ஒரு கேம் ஷோ ஒன்றை ஜி தமிழ் பிரபலங்களுடன் நடத்தி அதனை ஒளிப்பரப்ப உள்ளது. பலரும் இதை கேட்டவுடன் கொரன்டைனில் எப்படி இவ்வாறு நடக்கும் என்ற கேள்வியை முன் வைத்தனர்.

ஆனால் ஜி தமிழ் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. வீடியோ கான்பிரன்ஸின் மூலம் இந்த விளையாட்டு போட்டி நடக்க உள்ளதாக தெரிவிக்கபட்டிருக்கிறது. இந்த விளையாட்டு போட்டியில் இரு நட்சத்திரங்கள் ஒரு அணி என்று மூன்று அணி போட்டியிடும் விளையாட்டு போட்டியாக இது நடக்க உள்ளது.
இந்த விளையாட்டு போட்டியை ஜியின் ஆஸ்தான தொகுப்பாளரான அர்சனா தொகுத்து வழங்குகிறார். ஜி தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா மற்றும் பேட்ட ராப் போன்ற வெற்றி நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி மக்களை இந்த கசப்பான நேரத்தில் மகிழ்விக்க வருகிறது.

ஜியின் இந்த ஹவுஸ் பார்ட்டி விளையாட்டில் தீபக், விஷ்ணு, ஆயிஷா, ரேஷ்மா, மதன், வெண்ணிலா, கிர்த்திகா மற்றும் ஃபரினா ஆகியோர் பங்கு பெற உள்ளனர். இவர்கள் ஜி குடும்பத்தின் முக்கிய பிரபலங்கள் ஆவார்கள். ஜியில் ஒளிபரப்பப்படும் பல்வேறு நாடகங்களிலும் இவர்கள் நடித்து வருகிறார்கள்.

ஜி தொலைகாட்சி இந்த கடுமையான சூழ்நிலையை மக்கள் மகிழ்ச்சியுடன் கடந்து செல்ல இந்த பெரும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்புவதற்கு தான் என ஜி தமிழ் சார்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மே 4-ல் இருந்து ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும்.


Click it and Unblock the Notifications