ஜீ தமிழ் டிவியில் நேரம் மாறிய அஞ்சறைப்பெட்டி,ஹோம் மினிஸ்டர்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் நேரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் "ஹோம் மினிஸ்டர்" நிகழ்ச்சியின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
ஹோம் மினிஸ்டர் முற்றிலும் பெண்களுக்கான ஜாலியான நிகழ்ச்சி.... வேலை, குடும்பம் என எப்பொழுதும் பிஸி யாக இருக்கும் பெண்களை ஆட்டம், பாட்டம், விளையாட்டு என வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு கலர் புல் நிகழ்ச்சி ஹோம் மினிஸ்டர்.
இல்லத்தரசிகளின் இருப்பிடத்திற்கே சென்று அவர்களின் திறமைகளை வெளி கொண்டுவரும் ஒரு நிகழ்ச்சி. ஹோம் மினிஸ்டர். திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2:30 மணிக்கு ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இல்லத்தரசிகளின் விளையாட்டு
விளையாட்டை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி மூன்று சுற்றுகள் கொண்டுள்ளது. இம்மூன்று சுற்றுகளில் உள்ள விளையாட்டுகள் மாறுபட்டு இருப்பதால் இல்லத்தரசிகளின் ஆர்வத்தை தூண்டுகின்றது.

பட்டுப்புடவை பரிசு
போட்டியின் இறுதியில் வெற்றிபெறும் இல்லத்தரசிகளுக்கு அன்றைய ஹோம் மினிஸ்டர் பட்டதோடு பட்டுப்புடவையும், பரிசுகளும் வழங்கப்படுகின்றது. இனி இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 3:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அஞ்சறை பெட்டியும் மாறியது
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சமையல் நிகழ்ச்சி "அஞ்சறை பெட்டி".ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ரசிகர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு விதவிதமான சமையல் வகைகளை வழங்கும் இந்நிகழ்ச்சி தற்போது புதுப்பொலிவுடன் நேயர்களைக் கவரும் புதுப்புது சுற்றுகளைக் கொண்டு ஒளிபரப்பாக உள்ளது.

சமையல் ரகசியம்
இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் நேயர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களில் சுவையான சமையல் ரகசியத்தை வெளி உலகிற்கு காட்ட உள்ளார். மேலும் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அந்தந்த பகுதியின் சிறப்பு உணவை நேயர்களுக்கு வெளிபடுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சி தினந்தோறும் மதியம் 1:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











