மருதுக்கும் ரேவதிக்கும் திருமணம்.. ரேவதியை ஏமாற்றும் சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக் சிவனாண்டி பிடியில் இருந்து சாமுண்டீஸ்வரியை காப்பாற்றுகிறான். பிறகு சாமுண்டீஸ்வரியை மீட்டு வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். மயக்கம் தெளிந்த சாமுண்டீஸ்வரி என்னை காப்பாற்றியது யார் என்று கேட்க ரேவதி கார்த்திக் தான் என்று சொல்ல சூர்யகலா ஷாக் ஆகிறாள். மேலும் ரேவதி அவருக்கும் இந்த குடும்பத்துக்கும் பகை இருப்பதாக சொன்னீங்க. ஆனால், அவர் உங்கள் உயிரை காப்பாற்றி இருக்கிறார். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், எனக்கு அவரை பாக்கணும் போல இருக்கு, எனக்காக மனசு இறங்கி வாங்க என்று சொல்ல சாமுண்டீஸ்வரி வேறு ஒரு திட்டம் போடுகிறாள்.
கார்த்திகை தீபம்: இந்த விஷயத்தை மயில்வாகனம் கார்த்திக்கு ஃபோன் போட்டு சொல்ல, கார்த்திக் அத்தை அப்படி செய்ய வாய்ப்பு இல்லையே அப்படி இருக்கும் போது எப்படி சொன்னார்கள் என யோசிக்கிறார். இதையடுத்து சாமுண்டீஸ்வரி, சூர்யகலா இருவரும் சேர்ந்து ஒரு திட்டத்தை போட்டு வேறு ஒருவரை வீட்டுக்கு வரவைத்து அவர் தான், கார்த்திக் என சொல்ல திட்டம் போடுகின்றனர். இதைத்தொடர்ந்து அடுத்த நாள், கார்த்திக் என்ற பெயரின் மருது என்பவன் வீட்டுக்குள் நுழைய எல்லோரும் குழப்பம் அடைகின்றனர்.

ரேவதியை ஏமாற்றிய சாமுண்டீஸ்வரி: சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் இவன்தான் கார்த்திக் என்று அறிமுகப்படுத்துகிறாள். இது பொய் என தெரிந்தும் குடும்பத்தார் எதுவும் சொல்ல முடியாமல் அமைதி காக்கின்றனர். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் கார்த்திக்கை கூட்டிட்டு போய் வீட்டை சுத்தி காட்டு என்று அனுப்பி வைக்கிறாள். ரேவதி, மருதுவை அழைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றதும் குடும்பத்தார் அனைவரும் சாமுண்டீஸ்வரியிடம் கோவப்படுகின்றனர். அப்போது சாமுண்டீஸ்வரி மருதுவை ரேவதிக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்து இருப்பதாக சொல்கிறார்.
இதைக்கேட்டு ஆத்திரப்படும் ராஜராஜன், சாமுண்டீஸ்வரி நீ செய்வது எல்லாம் ரொம்ப தப்பு, கார்த்தினு வேறு ஒருத்தரை அறிமுகம் செய்து வைக்கிற இதெல்லாம் பெரிய தப்பு என சண்டை போடுகிறார்.அப்போது சாமுண்டீஸ்வரி, ரேவதிக்கு இது நல்லதோ அதைத்தான் நான் செய்கிறேன். இந்த விஷயத்தில் யாரும் தலையிடக்கூடாது என அனைவரையும் எச்சரிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











