ரேவதியை மறக்க முடியாமல் தவிக்கும் கார்த்திக்.. வேலைக்கு கிளம்பும் ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் இவன்தான் கார்த்திக் என்று சூர்யகலாவின் அண்ணனை அறிமுகப்படுத்துகிறாள். இது பொய் என தெரிந்தும் குடும்பத்தார் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கின்றனர்.அதன் பிறகு சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் கார்த்திக்கை கூட்டிட்டு போய் வீட்டை சுத்தி காட்டு என்று அனுப்பி வைக்கிறாள். ரேவதி, மருதுவை அழைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றதும் குடும்பத்தார் அனைவரும் சாமுண்டீஸ்வரியிடம் கோவப்படுகின்றனர்.

அப்போது ராஜராஜன், சாமுண்டீஸ்வரி நீ செய்வது எல்லாம் ரொம்ப தப்பு, கார்த்தினு வேறு ஒருத்தரை அறிமுகம் செய்து வைக்கிற இதெல்லாம் பெரிய தப்பு என சண்டை போடுகிறார். அப்போது சாமுண்டீஸ்வரி, ரேவதிக்கு இது நல்லதோ அதைத்தான் நான் செய்கிறேன். இந்த விஷயத்தில் யாரும் தலையிடக்கூடாது என அனைவரையும் எச்சரிக்கிறாள். இதையடுத்து ரேவதியிடம் இரண்டு குடும்பமும் ஒன்று சேர வேண்டும் என்றால், நீ கார்த்திகை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சொல்ல, ரேவதியும் திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறார்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி மருதுவிடம் நீங்க 6 மாதத்திற்குள் ரேவதியின் மனதை மாற்றி அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என சொல்கிறாள். உடனே மருதுவும் எனக்கு 6 மாசம் கூட வேண்டாம் ஒரு மாதத்தில் நான் அவள் மனதில் இடம்பிடித்து காட்டுகிறேன் என சொல்கிறான். இதையடுத்து, மயில்வாகனம் மற்றும் ராஜராஜன், கார்த்திக் வீட்டுக்கு சென்று, சாமுண்டீஸ்வரி இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலை செய்வாள் என்று எனக்குத் தெரியாது என சொல்கின்றனர். சாமுண்டீஸ்வரி யாரோ ஒருவனை இவன் தான் கார்த்திக் என்று சொல்கிறாள். அதோடு மட்டுமில்லாமல் ரேவதிக்கு அவனை திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறாள் என்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்தியின் மாஸ்டர் பிளான்: அப்போது மயில்வாகனம், "ரேவதி இப்போது நினைவிழந்த நிலையில் இருக்கிறாள். இந்த நேரத்தில் அவளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பது மிகவும் மோசமான செயல். இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று கவலையுடன் கூறுகிறார். அதற்கு கார்த்தி, "அத்தை ஏதோ திட்டம் போடுகிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால்,ஆளை மாற்றுவார்கள் என்று நினைக்கவில்லை. இதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்," என்று சொல்கிறார்.

கார்த்திகை பார்க்கும் ரேவதி: அந்த திட்டத்தை கேட்ட மயில்வாகனம், "இது சரியான ஐடியா தான். நாம் இப்படியே செய்தால், ரேவதிக்கு நிச்சயமாக உங்களைப் பற்றிய நினைவுகள் திரும்ப வரும்," என்கிறார்.இதற்குப் பிறகு, கார்த்திக் தனது திட்டப்படி ஒரு பெரிய கம்பெனியில் இருந்து ரேவதிக்கு இன்டர்வியூக்கான ஆர்டர் வருகிறது. அந் கடிதத்தை பார்த்த ரேவதி மகிழ்ச்சி அடைகிறாள். சாமுண்டீஸ்வரியும் ரேவதியை வேலைக்கு அனுப்ப சம்மதிக்கிறாள். பின்னர், ரேவதி மற்றும் சூரியகலா சேர்ந்து அந்த கம்பெனிக்கு சென்று வேலை தொடர்பான ஆர்டரை பெற்று வருகிறார்கள்.

அதே நேரத்தில், கார்த்திக் அந்த கம்பெனியின் முதலாளியை சந்தித்து, "எனக்காக ரேவதிக்கு இந்த கம்பேனியில் வேலை போட்டு கொடுத்ததற்கு நன்றி என்று கூறுகிறார்.
"நீங்கள் எனக்கு பல உதவிகள் செய்துள்ளீர்கள். இதை கூட நான் செய்யாமல் இருக்க முடியுமா?" என்று பதிலளிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X