மருதுடன் ரேவதிக்கு நிச்சயதார்த்தம்.. கல்யாண ஏற்பாட்டால் கதி கலங்கும் குடும்பம்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக் தனது திட்டப்படி ஒரு பெரிய கம்பெனியில் இருந்து ரேவதிக்கு இன்டர்வியூக்கான ஆர்டர் அனுப்பிகிறார். அந்த கடிதத்தை பார்த்த ரேவதி மகிழ்ச்சி அடைகிறாள். சாமுண்டீஸ்வரியும் ரேவதியை வேலைக்கு அனுப்ப சம்மதிக்கிறாள். பின்னர், ரேவதி மற்றும் சூரியகலா சேர்ந்து அந்த கம்பெனிக்கு சென்று வேலை தொடர்பான ஆர்டரை பெற்று வருகிறார்கள். அதே நேரத்தில், கார்த்திக் அந்த கம்பெனியின் முதலாளியை சந்தித்து, "எனக்காக ரேவதிக்கு இந்த கம்பேனியில் வேலை போட்டு கொடுத்ததற்கு நன்றி என்றார்.
ரேவதியுடன் இன்டர்வியூக்கிற்கு சென்ற சூரியகலா அந்த கம்பெனியின் எம்டி சண்முகம். கார்த்திக்கும் அந்த கம்பெனிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சாமுண்டீஸ்வரியுடம் சொல்கிறார். அதை நம்பி சாமுண்டீஸ்வரி, ரேவதியை வேலைக்கு செல்ல அனுமதிக்கிறாள்.
அதன் பிறகு வேலைக்கு தேர்வான ரேவதி வீட்டுக்கு போய் இந்த விஷயத்தை மகிழ்ச்சியாக சொல்கிறாள். இதைக் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சந்தோஷப்பட மருது நீ வேலைக்கு போ அது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் கல்யாணத்திற்காக தட்டு மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: இதைக்கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஷாக்காக சாமுண்டீஸ்வரி இன்னைக்கு நல்ல நாள் தான் ஒரு ஜோசியரை வைத்து தட்டை மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லி தட்டு மாற்றுகிறாள். இதனால் அனைவரும் சாமுண்டீஸ்வரி மீது கோபம் கொள்கின்றனர். சாமுண்டீஸ்வரி சந்திரகலா, சூரியகலாவிடம் ரேவதி மருதுவை கார்த்தி என நினைத்து தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கிறாள். எக்காரணத்தை கொண்டும் ரேவதிக்கு உண்மை தெரியக்கூடாது என்று சொல்கிறாள்.
கார்த்திக், ரேவதி சந்திப்பு: மறுபக்கம், கார்த்தியின் நண்பன் இளையராஜா, நம்ப ஆபிசுக்கு புது எம்டி வரப்போகிறார். அவரை நீ தான் ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும் என சொல்கிறார். அதன் பின், கார்த்திக் சூட்கோட் போட்டுக்கொண்டு செம ஸ்டைலாக காரில் இருந்து இறங்கி வருகிறார்.புது எம்டிக்கு ரேவதி ஆரத்தி எடுக்க, அந்த ஆபிசில் வேலை செய்யும் பிரியா, கார்த்திக்கின் ஸ்டைல் மற்றும் அழகை பார்த்து மயங்கி போகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











