கார்த்தியை அடைய நினைக்கும் பிரியா செய்த அசிங்கமான வேலை.. கொந்தளித்த ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்தியின் நண்பன் இளையராஜா, நம்ப ஆபிசுக்கு புது எம்டி வரப்போகிறார். அவரை நீ தான் ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும் என சொல்கிறார். அதன் பின், கார்த்திக் சூட்கோட் போட்டுக்கொண்டு செம ஸ்டைலாக காரில் இருந்து இறங்கி வருகிறார். புது எம்டிக்கு ரேவதி ஆரத்தி எடுக்க, அந்த ஆபிசில் வேலை செய்யும் பிரியா, கார்த்திக்கின் ஸ்டைல் மற்றும் அழகை பார்த்து மயங்கி போகிறாள்.
கார்த்திகை தீபம்: எப்படியாவது கார்த்தியின் மனதில் இடம் பிடித்து, அந்த அலுவலகத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என முடிவு செய்கிறாள். ஆனால், புதிதாக வந்து இருக்கும் ரேவதி அழகாக இருப்பதாலும், கார்த்திக் தனது அறையில் இருந்து ரேவதியை பார்த்துக்கொண்ட இருப்பதால் ஆத்திரப்படும் பிரியா, ரேவதியை இந்த அலுவலகத்தை விட்டு விரட்ட வேண்டும் என முடிவு செய்கிறாள். இதனால், கார்த்திக் எழுதுவது போல ஒரு கடிதத்தை எழுதி, கார்த்திக் கொடுத்த பைலுக்குள் வைத்து விடுகிறாள்.

அசிங்கமான வேலை: அந்த கடிதத்தை படித்து ஆத்திரப்படும் ரேவதி, நேராக எம்டி ரூமுக்கு சென்று கார்த்தியிடம், என்ன கொஞ்சம் கூட உங்களுக்கு அறிவு இல்லை. ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் அசிங்கமா கடிதம் எழுதுவீங்களா... என்று ஆத்திரப்படுகிறாள். இதைக்கேட்டு பதறிப்போன கார்த்திக், அந்த கடிதத்தை வாங்கி படித்துவிட்டு, இதை நான் எழுதவே இல்லை என்று சொல்ல, ஆத்திரப்படும் ரேவதி, நீங்க கொடுத்த பைலில் தான் இந்த லெட்டர் இருந்தது. இந்த மாதிரி வேலையை என்கிட்ட வச்சிக்காதீங்க என திட்டிவிட்டு கோவமாக வெளியில் வர, அப்போது இளையராஜா என்ன மேடம் கோவமா இருக்கீங்க என்று கேட்க, அதைப்போய் உங்க எம்டி கிட்ட கேளுங்க என சொல்கிறாள்.
இதை தூரத்தில் இருக்கும் பார்க்கும் பிரியா, இனிமேல் இந்த ரேவதியோட இல்லை இருக்காது. இதுக்கு மேல இவ ஆபிசுக்கு வரமாட்டா என நினைத்து சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











