வீட்டை விட்டு வெளியேறிய ராஜராஜன்.. கார்த்தியிடம் கோபப்படும் ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: ரேவதி கார்த்தியின் ஆபீஸில் வேலைக்கு சேர்ந்துவிட, ரேவதியை தனது அறையில் இருந்து கார்த்திக் பார்த்துக்கொண்டே இருக்கிறார். கார்த்தியை பிரியா பார்த்து ரசித்துக்கொண்டு இருக்க, அவன் ரேவதியை பார்ப்பதை பார்த்து கடுப்பாகிறாள். எம்டிக்கு ரேவதி ஒரு கண் இருக்குபோல, அதை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது என ஒரு திட்டத்தை போடுகிறாள். பின், கார்த்திக் ரேவதியை தனது கேபினுக்கு அழைத்துப் பேச இதை பிரியா பார்த்து மேலும் கடுப்பாகிறாள். கார்த்திக் ரேவதிக்கு சில வேலைகளை கொடுக்க அதற்கான டாக்குமெண்டில் பிரியா. கார்த்திக் தனது கையால் எழுதியது போல ரேவதிக்கு ஒரு லவ் லெட்டர் எழுதி வைக்கிறாள்.

இதைப் படித்த ரேவதி, கடுப்பாகி என்ன சார் இது, வேலைக்கு வந்தவங்ககிட்ட இப்படித்தான் அசிங்கமா நடந்து கொள்வீங்களா... இப்படி அசிங்கமா கடிதம் எழுதி இருக்கீங்க என சொல்லி கோவப்படுகிறாள். கார்த்திக் நான் அதை எழுதவில்லை என்று சொல்லியும் ரேவதி அதை நம்பாமல், இப்படிப்பட்ட வேலையே வேண்டாம் என அங்கிருந்து கிளம்புகிறாள். ரேவதி வெளியே வர, அந்த நேரம் அங்கு வரும் இளையராஜா, என்ன மேடம் முகத்தில் கோவம் தெரிகிறது என்று கேட்க, ரேவதி அது என்னனு உங்க எம்.டி கிட்ட கேளுங்க என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். பின் கார்த்திக் இளையராஜாவிடம் நான் லெட்டர் எழுதவே இல்லை, ஆனால், ரேவதி லெட்டரை காட்டி சண்டைபோடுகிறாள் என்று சொல்கிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: மறுபக்கம் மயில்வாகனம் மற்றும் ராஜராஜன் ஆகியோர் மாப்பிள்ளையாக வந்த மருதுவை இந்த வீட்டை விட்டு ஓட வைக்க வேண்டும், இவன் கார்த்தி இல்லை. மருது என்று சொன்னா, ரேவதி நம்பமாட்டா, இதனால், இவன் வாயில் இருந்தே உண்மையை சொல்ல வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து ரேவதியிடம் காட்டவேண்டும் என திட்டம் போடுகின்றனர். அந்த திட்டத்தின்படியே மயில்வாகனம், வேண்டும் என்றே மருதுவிடம் சண்டை போட, மருது எல்லா உண்மையையும் சொல்விடுகிறார். இதை ராஜராஜன் வீடியோவாக எடுத்துக்கொண்டு இருக்க, ஒரு கட்டத்தில் மருது, வீடியோ எடுப்பதை பார்த்துவிட்டு ராஜராஜனிடம் இருந்து போனை எடுக்க முயற்சி செய்கிறார். அப்போது நடந்த தள்ளுமுள்ளில் ராஜராஜன் கையில் இருந்த போன் சாமுண்டீஸ்வரி பக்கம் வந்து விழுகிறது.

வீட்டை விட்டு வெளியேறிய ராஜராஜன்: இதையடுத்து, மருது இருவரும் சேர்ந்து என்னிடம் சண்டை போட்டு என் வாயில் இருந்தே உண்மைய வாங்கிவிட்டார்கள். அதை இவர்கள் வீடியோவை எடுத்து வைத்து இருக்கிறார்கள் என சாமுண்டீஸ்வரனிடம் வீடியோவை காட்டுகிறான். இதைப்பார்த்து ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, மருதுவிற்கும் ரேவதிக்கும் நிச்சயம் இன்னும் 6 மாசத்தில் கல்யாணம் நடந்தே ஆகும். அதற்கு யாராவது இந்த வீட்டில் தடையா இருந்தா நான் யாரையும் பாக்கமாட்டேன் என்று சொல்கிறாள். இதனால், ராஜராஜன், சாமுண்டீஸ்வரிக்கு இடையே சண்டை வர, ராஜராஜன் கோபித்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X