ரேவதி, கார்த்தியை பிரிக்க பிரியா செய்யும் சூழ்ச்சி... கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்தி மீது கோவப்பட்டு வீட்டுக்கு வந்த ரேவதி கோவத்தோடு வீட்டிற்கு வந்து நடந்ததை சொல்ல சாமுண்டீஸ்வரி அந்த எம்டி பெயர் என்ன என்று கேட்கிறாள். ரேவதி கார்த்தி என சொன்னதும் அதைக் கேட்டு சாமுண்டீஸ்வரி ஷாக் ஆகிறாள். பின் சூரிய கலாவை தனியாக அழைத்து அந்த கார்த்தி யார் என கண்டுபிடி என்று சொல்ல என்கிறார். இதையடுத்து, சூரியகலா ஆபீசுக்கு கிளம்பி வருகிறாள். இளையராஜாவை சந்தித்து உங்க எம்டி கார்த்தியை பார்க்கணும் என்று சொல்கிறாள். அதன் பிறகு கார்த்தி பிளான் செய்து வேறு ஒருவரை அந்த இடத்தில் எம்டியாக நடிக்க சொல்கிறார்.

இதையடுத்து, கார்த்தி ரேவதிக்கு போன் செய்து அந்த லெட்டரை நான் எழுதினதை, பைலுக்கு நடுவுல வச்சதையோ நீங்க பாத்தீங்களா என்று கேள்வி கேட்கிறார். மேலும், உங்களுக்கு எங்க அலுவலகத்தில் வேலை பார்க்கும் திறமை இல்லை என்றால் திறமை இல்லை என்று சொல்லிவிட்டு போங்க அதைவிட்டு விட்டு, என் மேல் பழியை போட்டுவிட்டு போகாதீங்க என சொல்கிறார். இதைக்கேட்டு ரேவதி ஆத்திரப்படுகிறாள். பின், சாமுண்டீஸ்வரி நீ வேலைக்கு போ அதுதான் உன்னுடைய எதிர்காலத்துக்கு நல்லது, யாரோ ஒருவன் லெட்டர் கொடுத்தான் என்பதற்கான வேலைக்கு போகாமல் இருப்பது எல்லாம் சரியில்லை என்று சொல்கிறாள். இவையெல்லாத்தையும் ரேவதி யோசித்து மீண்டும் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அடுத்த நாள் இளையராஜா ரேவதி மீண்டும் வேலைக்கு வருவாளா என்று கேட்க, கார்த்தி, கண்டிப்பாக ரேவதி வருவா.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு ஏன் என்றால், அவ என்ன சொன்ன வேலைக்கு வருவா என்று தெரிந்து அந்த விஷயத்தை அவளிடம் பேசி இருக்கிறேன். இதனால், நிச்சயம் வேலைக்கு ரேவதி வருவார் என்கிறார். கார்த்தி சொன்னது போலவே மீண்டும் ரேவதி வேலைக்கு வருகிறாள். கார்த்தியை சந்தித்த ரேவதி, நான் மீண்டும் வேலைக்கு வந்து இருக்கேன், நான் ஒன்னும் வேலைக்கு பயந்து இந்த கம்பேனியை விட்டு போகல, எனக்கு என்ன வேணும் வேலை வேண்டுமானாலும் கொடுங்க.. என்னால செய்ய முடியும் என சவால் விட கார்த்திக் ஒரு பைலை கொடுத்து நாளைக்கு கிளைட்டுக்கு இந்த பைலை பிரசன்டேஷன் செய்ய வேண்டும் என சொல்கிறார். இதையடுத்து, பிரியா ரேவதியிடம் எம்டி என்ன பேசிட்டு இருந்தாரு என்று கேட்க ஒரு பைலை கொடுத்து பிரசன்டேஷன் செய்ய வேண்டும் என சொன்னதாக சொல்கிறாள். பிரியா யாருக்கும் தெரியாமல் அந்த பைலை மாற்றி வைக்கிறாள்.

பிரியா செய்யும் சூழ்ச்சி: மறுபக்கம் சாமுண்டீஸ்வரி சூரியகலாவிடம் கூடிய விரைவில் ரேவதிக்கும் மருந்துக்கும் ரகசியமாக மாலை மாற்றும் சடங்கை நடத்த வேண்டும் என சொல்கிறாள். ரேவதி சம்மதிப்பாளா என சூரியகலா கேட்க சாமுண்டீஸ்வரி சம்மதிக்க வைக்கணும் என சொல்கிறார். தொடர்ந்து ரேவதி வீட்டுக்கு வந்ததும் கார்த்திக் போன் செய்து எல்லாம் ஓகே தானே? பிரசன்டேஷன் பண்ணிடுவீங்களா? என விசாரிக்க ரேவதி கண்டிப்பா பண்ணிடுவேன் என வாக்கு கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X