பிரசன்டேஷனில் காத்திருந்த ட்விஸ்ட்.. கார்த்தியின் மீது கோபப்பட்ட ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: சாமுண்டீஸ்வரி சூரியகலாவிடம் கூடிய விரைவில் ரேவதிக்கும் மருந்துக்கும் ரகசியமாக மாலை மாற்றும் சடங்கை நடத்த வேண்டும் என சொல்கிறாள். ரேவதி சம்மதிப்பாளா என சூரியகலா கேட்க சாமுண்டீஸ்வரி சம்மதிக்க வைக்கணும் என சொல்கிறார். தொடர்ந்து ரேவதி வீட்டுக்கு வந்ததும் கார்த்திக் போன் செய்து எல்லாம் ஓகே தானே? பிரசன்டேஷன் பண்ணிடுவீங்களா? என விசாரிக்க ரேவதி கண்டிப்பா பண்ணிடுவேன் என வாக்கு கொடுக்கிறாள்.

இன்றைய எபிசோடில், ரேவதி பிரசன்டேஷன் செய்ய தயாரான நிலையில், பிரியா மனதிற்குள் சந்தோஷப்படுகிறாள். தப்பான பிரசன்டேஷன் கொடுத்து இந்த ரேவதி எல்லாம் முன்னாடியும் அசிங்கப்படப்போறபாரு என சொல்லி சந்தோஷப்படுகிறாள்.ரேவதி பிரசன்டேஷன் செய்ய போக, அந்த நேரம் கார்த்திக் அங்கு இருந்த பைல் பார்த்து அது மாறி இருப்பதை புரிந்து கொண்டு அவளை தடுத்து நிறுத்துகிறான். அதற்கு பதிலாக அவனே பிரசன்டேஷன் செய்ய ரேவதி கடுப்பாகிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அதன் பிறகு ரேவதி கார்த்தியிடம் என்ன பிரசன்டேஷன் செய்ய சொல்லிட்டு பின் நீங்க கொடுத்தால் என்ன அர்த்தம், என்னை அவமானப்படுத்துறீங்களா என கோபப்பட கார்த்தி ஃபைல் மாறி இருக்கும் விஷயத்தை சொல்கிறான். இதையடுத்து, கார்த்திக் இளையராஜாவிடம் கம்பெனியில் யாரோ ஒரு எதிரி இருக்காங்க, அன்னைக்கு ரேவதிக்கு லெட்டர் எழுதுனாங்க, இன்னைக்கு ரேவதிக்கு நான் கொடுத்த பைல் மாறி இருக்கு, என தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகிறான்.

ரேவதிக்கு நிச்சயதார்த்தம்: அடுத்ததாக சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு ஃபோன் செய்து உன்னை பார்க்க கம்பெனிக்கு வருகிறேன். அதை யாரிடமும் சொல்லவேண்டாம் என சொல்லிவிட்டு திடீரென வருகிறாள்.ன சாமுண்டீஸ்வரியை தூரத்தில் இருந்து இளையராஜா பார்த்துவிடுகிறாள். ஆபிசுக்கு வரும் சாமுண்டீஸ்வரி, எம்டிஐ பார்க்க வேண்டும் என்று சொல்லி கார்த்தி ரூமுக்கு வர கார்த்திக் பின்பக்கமாக திரும்பியிருக்க சாமுண்டீஸ்வரி தனது மகளுக்கு நிச்சயதார்த்தம். அதனால் நாளைக்கு அரை நாள் லீவு வேண்டும் என்று கேட்க தாராளமா எடுத்துக் கொண்டு திரும்ப கார்த்திக்கு பதிலாக பழைய பாஸ் அமர்ந்திருக்கிறார். மேலும் ரேவதிக்கு நிச்சயதார்ததம் எனதெரிந்த கார்த்திக் அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X