சந்திரகலாவின் சதி.. கார்த்திக் ரேவதி மீண்டும் சேர்வார்களா? கார்த்திகை தீபம்!

சென்னை: ரேவதிக்கு பழைய விஷயத்தை நினைவுப்படுத்தினால் அது, மூலையை பாதிக்கும் இதனால், கோமாவிற்கு சென்றுவிடுவார், அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என டாக்டர் சொல்கிறார். இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா ரேவதிக்கு பழசு எதுவும் நினைவுக்கு வரக்கூடாது என்று சொல்லி கார்த்தியை வீட்டை விட்டு வெளியே துரத்துகின்றனர்.

மறுபக்கம் சந்திரகலா, சிவனாண்டியை சந்தித்து ஒரு சந்தோஷமான விஷயம் ரேவதிக்கு இனிமேல் நினைவே வராது என்கிறார். அதான் டாக்டர் விரைவில் வரும் என்று சொல்லி இருக்காங்களே, ஆமாம், சொன்னாங்க ஆன, நான் அந்த நினைவை வர விடமாட்டேன். அதுக்குத்தான் நான் அந்த வீட்டில் இருக்கிறேன் என்று சொல்கிறாள். மறுபக்கம், சாமுண்டீஸ்வரி கார்த்தியின் பொருட்களை எல்லாம் வெளியில் தூக்கிபோட்டு கொளுத்திவிட்டு, இனி நீ இந்த வீட்டிற்கு வரவேகூட என்று சொல்கிறார். இதனால்,
வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திக் கோவிலுக்கு சென்று ரேவதிக்காக வேண்டிக்கொள்ள ராஜராஜன், மயில் வாகனம் அங்கு வந்து ஆறுதல் சொல்கின்றனர்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், கார்த்திகை வழி மறித்து பேசும் சந்திரகலா, என்னை நீ இந்த வீட்டை விட்டு அனுப்ப நினைச்ச, ஆனால், அந்த கடவுள் உன்னையும் ரேவதியையும் பிரித்துவிட்டார். அதான் அக்கா உன்னை வெளியில் துரத்திவிட்டாலே இதுக்கு மேல நீ இந்த ஊரில் இருந்து என்ன செய்யப்போற, திரும்பி சென்னைக்கே போ என்று திமிராக பேசுகிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்தியை தேடும் ரேவதி: மறுபக்கம், ரேவதியை டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் அடிக்கடி செக்கப்புக்கு அழைத்து வர வேண்டும் என சொல்கிறார். இதையடுத்து, வீட்டுக்கு ரேவதியை ஊரை விட்டு தள்ளி இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல, ரேவதி வழக்கமாக போற கோவிலுக்கு போகாம எதுக்கு இங்க வந்தோம் என்று கேள்வி கேட்க, சந்திரக்கலா, கார்த்திகை பற்றி உனக்கு எந்தவிதமான நினைவு வரக்கூடாது என்பதற்காகத்தான் இங்க கூட்டிட்டு வந்திருப்போம் என மைண்ட் வாய்ஸில் பேசுகிறாள். பிறகு ரேவதி, சாமுண்டீஸ்வரியிடம் யாரோ என்னை பார்க்கிற மாதிரி இருக்குமா என சொல்ல கார்த்திக் தூரத்திலிருந்து ரேவதி பார்த்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X