சாமுண்டீஸ்வரி, ரேவதி மீட்கப்படுவார்களா? தேடி அலையும் கார்த்தி.. கார்த்திகை தீபம்!

சென்னை: சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் சாமுண்டீஸ்வரியை பழி தீர்க்க வெளிநாட்டில் இருந்து டேனி என்பவரை வரை வைக்கின்றனர். அவனின் திட்டத்தின் படி பெயர் சூட்டும் விழாவிற்கு சாமுண்டீஸ்வரி செல்கிறாள். அதே நேரம் சாமுண்டீஸ்வரி போனை மறந்துவிட்டு சென்றுவிடுவதால், ரேவதி ஆபிசுக்கு செல்லும் போது போனை கொடுத்துவிட்டு செல்வதாக சொல்லிவிட்டு செல்கிறார். இந்த நேரத்தில் டேனி தனது திட்டத்தின்படி சாமுண்டீஸ்வரியை கடத்தும் நேரத்தில் ரேவதி அங்கு செல்ல, டேனி இருவரையும் கடத்துகின்றனர். மறுபக்கம் ஆபிசில் கார்த்திக் ரேவதி வரவில்லையே என எதிர்பார்த்துக்கொண்டு இருக்க ரேவதி மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் காணாமல் போனது தெரிந்து கார்த்திக், மயில்வாகனம் இருவரும் பல இடத்தில் தேடி அலைகின்றனர்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: கடத்தப்பட்ட சாமுண்டீஸ்வரி மற்றும் ரேவதியை கார்த்தியின் செங்கல் சூளைக்குள் வைத்து மறைத்து வைத்திருக்க இதை அறியாத தொழிலாளர்கள் சூளையை பற்ற வைக்க போகின்றனர். அப்போது, பற்ற வைக்க சென்றவனை பாம்பு கடித்து விட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதே நேரம், கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் சிவனாண்டியை தேடி அலைகின்றனர். ஒரு கட்டத்தில் இது எல்லாம் சிவனாண்டியின் வேலை தான் என்பது தெரியவந்ததால், அவனைத் தேடி கண்டுபிடித்து மிரட்டி விசாரிக்க அவன் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்கிறான். கார்த்திக் அங்கிருந்து கிளம்பியதும் அந்த வெளிநாட்டு ரவுடி டேனியிடம், அடுத்து நீ இவனை தான் போட்டு தள்ளனும். இவனுக்கு சரியான ஆளு நீதான் என சொல்கிறான்.

நடக்கப்போவது என்ன: மறுபக்கம் மீண்டும் சூளையை பற்ற வைக்கக் தொழிலாளர்கள் செல்ல அப்போது ஒருவனுக்கு கரண்ட் ஷாக் அடித்து தூக்கி வீசப்படுகிறான். அதோடு கடத்திய ரவுடி ரேவதி கழுத்தில் இருந்த செயினை கொண்டு வந்து தனது மனைவியிடம் கொடுக்க அவள் எங்கிருந்து எப்படி வந்தது என்று கேட்க, கொடுத்தா வாங்கிக்க எப்படி வந்தது என்று கேட்காதே என திட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X