ரேவதி, சாமுண்டீஸ்வரி காப்பாற்றப்படுவார்களா? கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: கடத்தப்பட்ட சாமுண்டீஸ்வரி மற்றும் ரேவதியை கார்த்தியின் செங்கல் சூளைக்குள் வைத்து மறைத்து வைத்திருக்க இதை அறியாத தொழிலாளர்கள் சூளையை பற்ற வைக்க போகின்றனர். அப்போது, ஒருவனை பாம்பு கடித்து விட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதே நேரம், கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் சிவனாண்டியை தேடி அலைகின்றனர். ஒரு கட்டத்தில் இது எல்லாம் சிவனாண்டியின் வேலை தான் என்பது தெரியவந்ததால், அவனைத் தேடி கண்டுபிடித்து மிரட்டி விசாரிக்க அவன் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்கிறான்.
மறுபக்கம் மீண்டும் சூளையை பற்ற வைக்கக் தொழிலாளர்கள் செல்ல அப்போது ஒருவனுக்கு கரண்ட் ஷாக் அடித்து தூக்கி வீசப்படுவதால், இன்னைக்கு வேலையை ஆரம்பிக்க வேண்டாம் என ஒருவர் சொல்ல, இப்போது எமகண்டம் நடக்கிறது. அது முடிந்ததும் செங்கல் சூளையை பற்ற வைக்கலாம் என முடிவு செய்கின்றனர். மறுபக்கம், கடத்திய ரவுடி ரேவதி கழுத்தில் இருந்த செயினை கொண்டு எடுத்து வந்த பழனி ரெடி, அதை தனது மனைவியிடம் கொடுக்க அவள் எங்கிருந்து எப்படி வந்தது என்று கேட்க, கொடுத்தா வாங்கிக்க எப்படி வந்தது என்று கேட்காதே என திட்டுகிறான்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் ரேவதி மற்றும் சாமுண்டீஸ்வரியை பல இடங்களில் தேடி வருகின்றனர். அப்போது வழியில் குழந்தை கார் முன்னே வந்துவிட கார்த்திக் காரை நிறுத்தி குழந்தையை காப்பாற்றுகிறான். அப்போது தான் குழந்தையின் கழுத்தில் ரேவதியின் செயின் இருப்பதை பார்க்கிறான். அதன் பிறகு அந்த குழந்தையின் அம்மாவை சந்தித்து இந்த செயின் எப்படி வந்தது என்று விசாரிக்க, அந்த பெண் என் கணவர் கொடுத்ததாக சொல்கிறார். இதையடுத்து கார்த்திக், செயினுக்கான பணத்தை கொடுத்து அந்த செயினை வாங்குவதோடு அந்த ரவுடியின் ஃபோன் நம்பரை வாங்குகிறான்.
ரௌடி சொன்ன தகவல்: அதன் பின், ஒயின் ஷாப்பில் இருக்கும் அவனுக்கு மயில்வாகனம் பிரியாணி டெலிவரி செய்ய வந்திருப்பதாக சொல்லி அவன் இருக்கும் இடத்தை கேட்டறிந்து இங்கு சென்று அவனைப் பிடித்து அடித்து விசாரிக்க அவன் சிவனாண்டி சொல்லி தான் இவை அனைத்தையும் செய்ததாகவும் ரேவதி மற்றும் சாமுண்டீஸ்வரி செங்கல் சூளைக்குள் வைத்து எரிக்கப் போவதையும் சொல்கிறான். அதன் பிறகு கார்த்திக், மயில்வாகனம் ஆகியோர் அங்கிருந்து சூளைக்கு கிளம்பி வருகின்றனர். இதை தெரிந்து கொண்ட வெளிநாட்டு ரவுடி டேனி தனது அடி ஆட்களை வைத்து கார்த்தியின் கதையை முடிக்க சொல்கிறார். அவனது அடியாட்களுடன் கார்த்திக் சண்டையிடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications