ரேவதி, சாமுண்டீஸ்வரி காப்பாற்றிய கார்த்திக்.. கொத்தாக சிக்கப்போகும் கார்த்திக்.. கார்த்திகை தீபம்
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் ரேவதியின் ஜெயின் மூலம் உண்மையை தெரிந்து கொண்ட கார்த்திக், ஒயின் ஷாப்பில் இருக்கும் ரௌடி பழனியை பிரியாணி டெலிவரி செய்ய வந்திருப்பதாக சொல்லி அவன் இருக்கும் இடத்தை கேட்டறிந்து இங்கு சென்று அவனைப் பிடித்து அடித்து விசாரிக்க அவன் சிவனாண்டி சொல்லி தான் இவை அனைத்தையும் செய்ததாகவும் ரேவதி மற்றும் சாமுண்டீஸ்வரி செங்கல் சூளைக்குள் வைத்து எரிக்கப் போவதையும் சொல்கிறான். அதன் பிறகு கார்த்திக், மயில்வாகனம் ஆகியோர் அங்கிருந்து சூளைக்கு கிளம்பி வருகின்றனர்.

கார்த்திகை தீபம்: இதை தெரிந்து கொண்ட வெளிநாட்டு ரவுடி டேனி தனது அடி ஆட்களை வைத்து கார்த்தியின் கதையை முடிக்க சொல்கிறார். அவனது அடியாட்களுடன் கார்த்திக் சண்டையிட்டு அங்கு இருந்த ரேவதி மற்றும் சாமுண்டீஸ்வரியை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கிறார். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் மயக்கம் தெளிய ஊசி போட்டு இருக்கேன் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார். இதையடுத்து, ரேவதி கண்விழித்து பார்க்க தன்னை காப்பாற்றியது எம்டி என தெரிந்து அவரக்கு நன்றி சொல்கிறார்.
கார்த்திக் சிக்குவாரா?: இதையடுத்து, இவர்கள் வீட்டுக்கு வந்ததும் சாமுண்டீஸ்வரி நம்மளை காப்பாற்றியது யார் என்று கேட்க ரேவதி என்னுடைய எம்டி தான் உங்களை காப்பாற்றினார் என சொல்கிறாள். இதனால் சாமுண்டீஸ்வரி அவரை வீட்டுக்கு கூப்பிடு, அவருக்கு நன்றி சொல்லி விருந்து வைக்க வேண்டும் என்று சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர். பின் ரேவதி கார்த்திக்கு போன் செய்து தனது வீட்டிற்கு அழைக்க அவனும் மறுப்பு தெரிவிக்க முடியாமல் வர சம்மதம் தெரிவிக்கிறான். உடனே ராஜராஜன் ஆகியோர் கார்த்திக்கு போன் செய்து எங்க வீட்டுக்கு வந்தா உண்மையை தெரிந்து விடும். பிரச்சினை உருவாகும் என்று சொல்கின்றனர். ஆனால் கார்த்திக் ரேவதி ஆசைப்பட்டு கூப்பிடும் போது மறுப்பு தெரிவிக்க முடியாது. அதனால பாத்துக்கலாம் நான் வீட்டுக்கு வரேன் என கார்த்திக் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications