மாஸா வீட்டுக்கு வந்த கார்த்திக்.. கீழே விழுந்த சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி, நம்மளை காப்பாற்றியது யார் என்று கேட்க ரேவதி என்னுடைய எம்டி தான் உங்களை காப்பாற்றினார் என சொல்கிறாள். இதனால், சந்தேகம் அடையும் சாமுண்டீஸ்வரி அவரை வீட்டுக்கு கூப்பிடு, அவருக்கு நன்றி சொல்லி விருந்து வைக்க வேண்டும் என்று சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர். பின் ரேவதி கார்த்திக்கு ஃபோன் செய்து தனது வீட்டிற்கு அழைக்க அவனும் மறுப்பு தெரிவிக்க முடியாமல் வர சம்மதம் தெரிவிக்கிறான்.
உடனே ராஜராஜன், மயில் இருவரும் கார்த்திக்கு போன் செய்து எங்க வீட்டுக்கு வந்தா உண்மையை தெரிந்து விடும். பிரச்சினை உருவாகும் என்று சொல்கின்றனர். ஆனால் கார்த்திக் ரேவதி ஆசைப்பட்டு கூப்பிடும் போது மறுப்பு தெரிவிக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் இப்போ நான் வீட்டிக்கு வரவில்லை என்றல், அத்தைக்கு சந்தேகம் வந்துவிடும் என சொல்கிறார்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ராஜராஜன் மயில்வாகனம் ஆகியோர் கார்த்திக் வீட்டுக்கு வந்தால் உண்மை தெரிந்துவிடுமே என பயப்படுகின்றனர். இதனால், கார்த்திக் வீட்டுக்கு வரும் போது சாமுண்டீஸ்வரி, சூர்ய கலா இருவரும் இருக்கக்கூடாது நினைத்து இருவரும் சேர்ந்து ஒரு திட்டத்தை போடுகின்றனர். அந்த திட்டத்தின் படி, சாமுண்டீஸ்வரி நடந்து வரும் இடத்தல் எண்ணெயை கொட்டிவிட அதில் சாமுண்டீஸ்வரி கால் வைக்க வழுக்கி கீழே விழுந்துவிடுகிறாள். அதேபோல் சந்திரகலா, சூரியகலாவுக்கு பேதி மாத்திரை கலந்து கொடுத்து அவர்களையும் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.
வீட்டுக்கு வந்த கார்த்திக்: இவர்கள் ஹாஸ்பிடலில் இருக்க மயில்வாகனம் இவர்களை வீட்டுக்கு அழைத்து வர லேட் செய்கிறான். இதற்கு இடையில் கார்த்திக் வீட்டுக்கு வர யாருக்கும் அவரை தெரியாதது போல நடந்து கொள்கின்றனர். ரேவதி அவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறாள். ஆனால், காபி எடுத்துவரும் மீனாட்சி வெளியே வந்து கார்த்தியை பார்த்ததும் அனைவரும் ஷாக்காக்கின்றனர். ஆனால், உண்மையை புரிந்து கொண்ட மீனாட்சி எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்


Click it and Unblock the Notifications