மொத்த குடும்பமும் பொய் சொல்கிறதா? மீனாட்சியிடம் சாமுண்டீஸ்வரி விசாரணை! கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற மயில்வாகனம் இவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டுமென்ற லேட் செய்கிறான். இதற்கு இடையில் கார்த்திக் வீட்டுக்கு வர யாருக்கும் அவரை தெரியாதது போல நடந்து கொள்கின்றனர். ரேவதி அவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறாள். ஆனால், காபி எடுத்துவரும் மீனாட்சி வெளியே வந்து கார்த்தியை பார்த்ததும் தம்பி நீங்களா? என்று கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதையடுத்து இன்றைய எபிசோடில் மீனாட்சி கார்த்தியை பார்த்து கேட்டதால், ரேவதி உங்களுக்கு ஏற்கனவே இவரை தெரியுமா என்று கேட்க, மீனாட்சி எதுவுமே சொல்லாமல் அமைதியாக நிற்கிறார். அப்போது, ராஜராஜன், அய்யோ இவங்க கிட்ட சொல்லாம விட்டுவிட்மே, என்ன சொல்ல போகிறார் என்று தெரியவில்லையே என பயப்படுகிறார். ஆனால், கார்த்திக், இவங்கஎன்னை கோவிலில் பார்த்து இருக்கிறார்கள் என்று சொல்லி சமாளிக்கிறார். நிலைமையை புரிந்து கொண்ட மீனாட்சியும் ஜூஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம் சாமுண்டீஸ்வரி, மருத்துவமனையில் மயில்வாகனம் செய்வதை எல்லாம் பார்த்துவிட்டு சந்தேகம் வர, சூர்யகலாவுக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு ரேவதியோட எம்.டி வந்துவிட்டாரா என்று கேட்க, சூர்யகலாவும் நான் ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்கிறாள். இதனால் சந்தேகமடையும் சாமுண்டீஸ்வரி உடனே வீட்டிற்கு கிளம்பலாம் என்று சொல்கிறாள். மயில்வாகனம் எவ்வளவு தடுக்க முயற்சி செய்தும் சாமுண்டீஸ்வரி கிளம்பி வருகிறாள். மேலும், வரும் வழியிலும் மயில்வாகனம், கார் பிரச்சனை என்று சொல்லி நேரத்தை கடத்த ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரி காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் வெளியேறி வீட்டுக்கு வருகிறாள்.
சந்தேகத்தில் சாமுண்டீஸ்வரி: இதற்கு இடையே மயில்வாகனம் கார்த்திக்கு ஃபோன் செய்து அத்தை வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தகவல் கொடுக்க, கார்த்திக் வீட்டிலிருந்து கிளம்பி செல்ல சாமுண்டீஸ்வரி வீட்டுக்குள் நுழைகிறாள். வீட்டிற்கு வந்ததும், ரேவதியிடம் உங்க எம்டி வந்து போயிட்டாரா என்று கேட்க ரேவதி, உங்களுக்காக ரொம்ப நேரமாக காத்திருந்தார் இப்போ தான் கிளம்பினார் என்று சொல்கிறாள். இதையடுத்து, சாமுண்டீஸ்வரி அனைவரிடமும் அவரை இதுக்கு முன்னாடி பாத்திருக்கீங்களா என்று கேட்க எல்லோரும் ஒரே மாதிரியாக இல்லை என சொல்கின்றனர். மொத்த குடும்பமும் சேர்ந்து உண்மையை மறைத்ததாக சாமுண்டீஸ்வரி சந்தேகம் வருகிறது. இதனால் வீட்டில் வேலை செய்யும் மீனாட்சியை அழைத்து இதுக்கு முன்னாடி ரேவதி எம்.டி-யை பார்த்து இருக்கியா என்று கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications