எம்.டி ரகசியம் உடையுமா? ஆபீஸுக்கு செல்லும் சாமுண்டீஸ்வரி.. மருது தான் ரெட்... கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில், வீட்டுக்கு கார்த்திக் வந்த நிலையில், மயில்வாகனம், ராஜராஜன் இருவரும் ஏதோ ஒரு திட்டம் போட்டு சாமுண்டீஸ்வரியை கீழே விழ வைத்துவிடுகின்றனர். பின் மயில்வாகனம், சாமுண்டீஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வேண்டுமென்ற தாமதப்படுத்துகிறார். ஒரு கட்டத்துக்கு போல் சந்தேகம் அடையும் சாமுண்டீஸ்வரி, நான் வீட்டுக்கு போகிறேன் என்று கிளம்புகிறார்.
உடனே, மயில்வாகனம் கார்த்திக்கு ஃபோன் செய்து அத்தை வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தகவல் கொடுக்க, கார்த்திக் வீட்டிலிருந்து கிளம்பி செல்ல சாமுண்டீஸ்வரி வீட்டுக்குள் நுழைகிறாள். வீட்டிற்கு வந்ததும், ரேவதியிடம் உங்க எம்டி வந்து போயிட்டாரா என்று கேட்க ரேவதி, உங்களுக்காக ரொம்ப நேரமாக காத்திருந்தார் இப்போ தான் கிளம்பினார் என்று சொல்கிறாள். பின் சாமுண்டீஸ்வரி அனைவரிடமும் அவரை இதுக்கு முன்னாடி பாத்திருக்கீங்களா என்று கேட்க எல்லோரும் ஒரே மாதிரியாக பதில் சொல்கின்றனர். மொத்த குடும்பமும் சேர்ந்து உண்மையை மறைத்ததாக சாமுண்டீஸ்வரி சந்தேகம் வருகிறது. இதனால் வீட்டில் வேலை செய்யும் மீனாட்சியை அழைத்து இதுக்கு முன்னாடி ரேவதி எம்.டி-யை பார்த்து இருக்கியா என்று கேட்கிறாள்.

கார்த்திகை தீபம்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில்,சாமுண்டீஸ்வரி மீனாட்சியை விசாரிக்க குடும்பத்தார் அனைவரும் மீனாட்சி என்ன சொல்லப் போகிறார் என பதற்றத்தில் இருக்க மீனாட்சி அவரை இதுவரைக்கும் பார்த்ததில்லை புதிதாக இருந்ததாக சொல்ல அனைவரும் நிம்மதி அடைகின்றனர். பின் ராஜராஜன் மீனாட்சிக்கு நன்றி சொல்ல, பிகார்த்திக் ஐயா எல்லாம் நல்லதுக்காக தானே பண்றாரு.. ரேவதி அம்மாவும் நல்லா இருக்கணும் அதுக்காகத்தான் பொய் சொன்னேன் என சொல்கிறார். சாமுண்டீஸ்வரி எல்லாரும் ஒரே மாதிரி பதில் சொல்றாங்க எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு என யோசிக்கிறாள். மேலும் சூரியகலாவிடம் நீயும் வீட்ல இல்ல, நானும் வீட்ல இருக்க முடியாத மாதிரி ஆயிடுச்சு என்னமோ திட்டமிட்டு செஞ்ச மாதிரி இருக்கு நாளைக்கு நான் ஆபீசுக்கு போயிட்டு எம் டி-ஐ பார்த்துவிட்டு வருகிறேன் என்கிறார்.'
யார் ரெட்: மறுபக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கார்த்திக் ரேவதியின் இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் யார் என தெரிந்ததா என கேட்கிறார். அப்போது இன்ஸ்பெக்டர், அந்த கூட்டத்தின் தலைவன் பெயர் ரெட் அவனை கண்டுபிடித்தால் அனைத்து உண்மைகளும் தெரிய வந்துவிடும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கு என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். அந்த நேரத்தில் தான் ரேவதிக்கு மாப்பிள்ளை ஆக வந்திருக்கும் மருது தான் அந்த ரெட் என்ற விஷயம் தெரிய வருகிறது. அவன் தனது அடியாட்களை உஷாராக இருக்கும்படி எச்சரிக்கிறான். மறுநாள் காலை ரேவதி ஆபிசுக்கு கிளம்ப, சாமுண்டீஸ்வரியும் நான் ஆபிசுக்கு வந்து உன் எம்டியை பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications