எம்டி ரகசியம் அம்பலம்..கார்த்திக்-ரேவதியை பிரிக்க சாமுண்டீஸ்வரி சதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் போலீஸ் ஸ்டேனுக்கு செல்லும் கார்த்திக் ரேவதியின் இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் யார் என தெரிந்ததா என கேட்கிறார். அப்போது இன்ஸ்பெக்டர், அந்த கூட்டத்தின் தலைவன் பெயர் ரெட் அவனை கண்டுபிடித்தால் அனைத்து உண்மைகளும் தெரிய வந்துவிடும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கு என சொல்கிறார்.அந்த நேரத்தில் தான் ரேவதிக்கு மாப்பிள்ளை ஆக வந்திருக்கும் மருது தான் அந்த ரெட் என்ற விஷயம் தெரிய வருகிறது. அவன் தனது அடியாட்களை உஷாராக இருக்கும்படி எச்சரிக்கிறான்.
மறுநாள் காலை ரேவதி ஆபிசுக்கு கிளம்ப, சாமுண்டீஸ்வரியும் நான் ஆபிசுக்கு வந்து உன் எம்டியை பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என சொல்கிறாள். இருவரும் ஆபிசுக்கு வர அப்போது எம்டி கார்த்திக் வராததால், சாமுண்டீஸ்வரி வெளியில் காத்து இருக்கிறார். இதையடுத்து கார்த்திக் காரில் வந்து இறங்க, எங்கே சாமுண்டீஸ்வரி பார்த்து விடுவாரோ என்ற பில்டப் வருகிறது. ஆனால், கார்த்திக் வேறு வழியாக சென்றுவிடுகிறார். இதையடுத்து, கார்த்திக் வந்துவிட ரேவதி கார்த்திக்கிடம் அம்மா உங்களை பார்க்க வந்து இருப்பதாக சொல்கிறார்.

கார்த்திக் தீபம்: இதனால் பதற்றம் அடையும் கார்த்திக், வழக்கம் போல எம்டியாக நடிக்கும் பழைய பாஸை வரவைத்து சமாளிக்கிறார். பிறகு சாமுண்டீஸ்வரி நாளைக்கு ஒரு பரிகார பூஜை இருக்கு அதனால ரேவதிக்கு லீவ் வேண்டும் என்று கேட்டு கிளம்பி செல்கிறாள். வெளியே வந்த சாமுண்டீஸ்வரிக்கு இன்னும் சந்தேகம் இருக்க திடீரென கார்த்திக் ஆபீஸிலிருந்து வெளியே கிளம்பி செல்ல இதை சாமுண்டீஸ்வரி பார்த்து ஷாக் ஆகிறாள். மறுபடியும், என்னை ஏமாற்றி விட்டான். இவனை சும்மா விடக்கூடாது என ஒரு திட்டம் போடுகிறாள்.
சாமுண்டீஸ்வரியின் பிளான்: இதையடுத்து, கார்த்திக் ஆபிசில் வேலை செய்யும் பிரியா வெளியே வர அவளை தனியாக அழைத்து நீ கார்த்தியை அடைய நான் உனக்கு உதவி செய்கிறேன். என் பொண்ணு ரேவதி அவனை நெருங்கவே விடாமல் பாத்துக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்று டீல் பேச பிரியாவும் இதற்கு சம்மதம் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications