ரேவதி, மருதுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்.. லிப்டில் சிக்கிய கார்த்திக்.. கார்த்திகை தீபம்!

சென்னை: சாமுண்டீஸ்வரி எம்டியை பார்க்க ஆபிசுக்கு வர, கார்த்திக், வழக்கம் போல எம்டியாக நடிக்கும் பழைய பாஸை வரவைத்து சமாளிக்கிறார். பிறகு சாமுண்டீஸ்வரி நாளைக்கு ஒரு பரிகார பூஜை இருக்கு அதனால ரேவதிக்கு லீவ் வேண்டும் என்று கேட்டு கிளம்பி செல்கிறாள். வெளியே வந்த சாமுண்டீஸ்வரிக்கு இன்னும் சந்தேகம் இருக்க திடீரென கார்த்திக் ஆபீஸிலிருந்து வெளியே கிளம்பி செல்ல இதை சாமுண்டீஸ்வரி பார்த்து ஷாக் ஆகிறாள். மறுபடியும், என்னை ஏமாற்றி விட்டான். இவனை சும்மா விடக்கூடாது என ஒரு திட்டம் போடுகிறாள்.

இதையடுத்து, கார்த்திக் ஆபிசில் வேலை செய்யும் பிரியா வெளியே வர அவளை தனியாக அழைத்து நீ கார்த்தியை காதலிப்பது எனக்கு தெரியும், ஆனால், கார்த்திக் ரேவதியை காதலிக்கிறார். ரேவதிக்கு நிச்சயம் ஆகிவிட்டதால், அவள் அவரை காதலிக்க மாட்டா இருந்தாலும் முன்னேச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீ கார்த்திக்கை கல்யாணம் செய்ய நான் உனக்கு உதவி செய்கிறேன். என் பொண்ணு ரேவதி அவனை நெருங்கவே விடாமல் பாத்துக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்று டீல் பேச பிரியாவும் இதற்கு சம்மதம் செல்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் ரேவதியின் ஆபீசுக்கு கிளம்ப சாமுண்டீஸ்வரி நானே உன்னை டிராப் பண்ணிடுறேன் என்று சொல்ல அவளும் நம்பி செல்கிறாள். இவர்களுடன் மருது மற்றும் சூரிய கலாவும் கிளம்பி செல்கின்றனர். சாமுண்டீஸ்வரி நேராக வண்டியை ரெஜிஸ்டர் ஆபீசுக்கு விட ரேவதி குழப்பம் அடைகிறாள். மேலும் பிரியாவுக்கு போன் செய்து இக்காரனத்தைக் கொண்டும் கார்த்தி அங்கிருந்து வெளியே வரக்கூடாது, அவனை வெளிய விடாம பார்த்துக்கோ என்று சொல்கிறாள்.

மருதுவுடன் கல்யாணம்: ரிஜிஸ்டர் ஆபீஸில் கல்யாண ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கும் சாமுண்டீஸ்வரி ரேவதியை கையெழுத்து மட்டும் போட சொல்ல ரேவதி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள். இது கல்யாணம் இல்ல வெறும் கையெழுத்து தான் போடப்போற என்று சொன்ன ரேவதி அதை ஏற்க மறுக்கிறாள். மறுபக்கம் ரேவதி இன்னும் ஆபீசுக்கு வராத காரணத்தினால் கார்த்திக் குழப்பம் அடைந்து மயில்வாகனத்திற்கு போன் செய்ய நான்கு பேரும் கிளம்பிப் சென்ற விஷயத்தை சொல்ல கார்த்திக் சந்தேகம் அடைகிறான்.

ரிஜிஸ்டர் ஆபீஸில் சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டிருக்க கார்த்தி கிளம்பி வர அவன் லிப்ட்டில் ஏறியதும் பிரியா லிப்டை ஆப் செய்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X