ரேவதியை நினைத்து பதறி தவிக்கும் கார்த்திக்.. கார்த்திகை தீபம்!

சென்னை: மருத்துவமனையில் இருந்து ரேவதியை டிஸ்சார்ஜ் செய்து ஊரை விட்டு தள்ளி இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல, ரேவதி வழக்கமாக போற கோவிலுக்கு போகாம எதுக்கு இங்க வந்தோம் என்று கேள்வி கேட்க, சாமுண்டீஸ்வரி, கார்த்திகை பற்றி உனக்கு எந்தவிதமான நினைவு வரக்கூடாது என்பதற்காகத்தான் இங்க கூட்டிட்டு வந்திருப்போம் என மைண்ட் வாய்ஸில் பேசுகிறாள். பிறகு ரேவதி, சாமுண்டீஸ்வரியிடம் யாரோ என்னை பார்க்கிற மாதிரி இருக்குமா என சொல்ல கார்த்திக் தூரத்திலிருந்து ரேவதி பார்த்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது.

இன்றைய எபிசோடில், ரேவதிக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர். உள்ளே சென்றதுமே, மீனாட்சியைப் பார்த்து இவங்க யார் என்று கேட்க, சாமுண்டீஸ்வரி வீட்டில் சமைப்பதற்காக வேலைக்கு சேர்த்து இருக்கிறேன் என சொல்கிறாள். அதோடு, ரேவதி வீட்டுக்கு வந்ததும் துர்கா எங்கே என்று கேட்க அவள் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட விஷயத்தை மறைத்து சென்னையில் படித்துக் கொண்டிருப்பதாக சொல்லி சமாளிக்கின்றனர்.

அதன் பிறகு, ரேவதி, சந்திரகலா சித்தி எங்கே என்று கேட்க உனக்கு உடம்பு சரி ஆகணும் என திருப்பதிக்கு நடைபயணம் சென்று இருப்பதாக சொல்கின்றனர். மேலும் சாமுண்டீஸ்வரி ரோகினியை ரூம் மாற்றிக் கொள்ள சொல்கிறாள். ரூமுக்குள் வந்த ரேவதி அங்கு ஒரு பைக் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதை யாருடையது என யோசிக்க சாமுண்டீஸ்வரி மீட்டிங் போன ஒரு இடத்தில் கொடுத்ததாக சொல்லி சமாளிக்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: மறுபக்கம் கார்த்திக் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ரேவதி ஆக்சிடென்ட் குறித்து விசாரிக்க சொல்கிறான். தெரியாமல் இடித்துச் சென்ற விபத்து தான் என்று சொல்ல கார்த்திக் யாராவது திட்டமிட்டு இதை செய்திருக்கிறார்களா என்பதை விசாரிக்க சொல்கிறான். உடனே அங்கிருந்த கான்ஸ்டபிள் சம்பந்தப்பட்ட ரவுடிகளுக்கு போன் செய்து உஷாரா இருக்க சொல்லி எச்சரிக்கிறார். ரேவதி மீனாட்சியிடம் ஹாஸ்பிடல் சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப போர் அடிக்குது நல்ல ருசியா சமைச்சு கொடுங்க என்று சொல்கிறாள். ரேவதி வீட்டில் சந்தோஷமாக இருப்பதை மயில்வாகனம் கார்த்திக்கு வீடியோ கால் மூலமாக காட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X