லிப்ட்டில் சிக்கிய கார்த்திக்.. கல்யாணத்தை நிறுத்த கார்த்திக் மாஸ்டர் பிளான்.. கார்த்திகை தீபம்!
சென்னை: ரிஜிஸ்டர் ஆபீஸில் கல்யாண ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கும் சாமுண்டீஸ்வரி ரேவதியை கையெழுத்து மட்டும் போட சொல்ல ரேவதி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள். இது கல்யாணம் இல்ல வெறும் கையெழுத்து தான் போடப்போற என்று சொன்ன ரேவதி அதை ஏற்க மறுக்கிறாள். மறுபக்கம் ரேவதி இன்னும் ஆபீசுக்கு வராத காரணத்தினால் கார்த்திக் குழப்பம் அடைந்து மயில்வாகனத்திற்கு போன் செய்ய நான்கு பேரும் கிளம்பிப் சென்ற விஷயத்தை சொல்ல கார்த்திக் சந்தேகம் அடைகிறான். ரிஜிஸ்டர் ஆபீஸில் சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டிருக்க கார்த்தி கிளம்பி வர அவன் லிப்ட்டில் ஏறியதும் பிரியா லிப்டை ஆப் செய்து விடுகிறாள்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில்,கார்த்திக் பிரியாவுக்கு போன் செய்து லிப்ட்டில் சிக்கி கொண்ட விஷயத்தை சொல்ல அவள் சரி பண்றதாக சொல்லி ஏமாற்றுகிறாள். மறுபக்கம் ரேவதி ரெஜிஸ்டர் ஆபீசில் திருமணத்திற்கு நோ சொல்ல சாமுண்டீஸ்வரி, கார்த்திக்(மருது) உன் பெயரில் வீடு வாங்க போகிறான் அதற்காகத்தான் இந்த ரிஜிஸ்டர் மேரேஜ் என்று சொல்கிறாள். மேலும், அம்மா உனக்கு எப்போதும் நல்லது தான் செய்வேன் என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள். இங்கே கார்த்திக் மயில்வாகனத்திற்கு ஃபோன் செய்து கோவிலில் தேட சொல்ல அவரும் கோவில் கோவிலாக தேடி அலைகிறார். எந்த கோவிலிலும் ரேவதி, சாமுண்டீஸ்வரியை காண முடியாத நிலையில் கார்த்திக்கு தகவல் கொடுக்க அவன் சந்தேகம் அடைந்து ரிஜிஸ்டர் ஆபீஸில் தேடி பார்க்க சொல்கிறான்.

திருமணம் நடக்குமா?: ரெஜிஸ்டர் ஆஃபீஸில் சூரியகலா, சாமுண்டீஸ்வரியிடம் ரேவதி ரெஜிஸ்டர் முன்னாடி இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என சொல்லிவிட்டால் பெரிய பிரச்சினையாகிவிடும் அத்தை என சொல்கிறாள். மற்றொரு பக்கம் மயில்வாகனம் ரிஜிஸ்டர் ஆபிஸ் வர, அனைவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து கார்த்திக்கு தகவல் கொடுக்க அவன் கல்யாணத்தை நிறுத்த ஐடியா ஒன்றை கொடுக்கிறார். பிறகு மயில்வாகனம் வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்ல அனைவரும் சாமுண்டீஸ்வரி மீது கோபமடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications