கார்த்தியால் நிகழ்ந்த விபரீதம்.. மயங்கி விழுந்த ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் மயில்வாகனம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க சம்முண்டீஸ்வரி யாரிடம் பேசுகிறார் என சந்தேகம் அடைந்து போனை வாங்கி பார்க்க வீடியோ காலில் கார்த்தி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்து போனை தூக்கிப்போட்டு உடைத்து மயில் வாகனத்தை எச்சரிக்கிறாள்.

மறுநாள் காலை, சாமுண்டீஸ்வரி தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரேவதிக்கு கோவிலுக்கு போகலாம் என்று தோன்ற அவள் கிளம்பி கோவிலுக்கு நடந்து வருகிறாள்.
அப்போது வழியில் கடன் கொடுத்த கந்துவட்டிக்காரர்கள் ஒருவர், ஒருகுடும்பத்தை மிரட்டிக்கொண்டு இருக்கிறார்.மேலும், குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டி வைத்துவிட்டு பணத்தை கொடுத்தால் தான், குழந்தைகளை வெளியில் விடுவேன் என மிரட்டுகிறான். இதைப்பார்த்த, இது என்ன அராஜகம் பண்ணீங்க ஒழுங்க குழந்தைகளை விடுங்க என கேட்க, அந்த ரௌடிகள் ரேவதியை தள்ளிவிடுகின்றனர். இதையடுத்து, ரேவதி போலீஸ்காரர்களை அழைத்துக்கொண்டு அங்கு வருகிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: போலீஸிடன் திரும்பி வந்து பார்க்க, அப்போது அவர்கள் குழந்தையை கையில் வாங்கி முத்தமிடுகின்றனர். அதுக்குள்ள யார் என்ன செய்தது என்று விசாரிக்க நீங்க போலீசை கூட்டிட்டு வர போனீங்க, நாங்க நீங்க எங்க குலசாமியை பார்க்க போனோம் அவர் தான், இந்த ரௌடிகளுக்கு சரியான பாடம் எடுத்தார் என சொல்கிறார். இதையடுத்து, ரேவதி அங்கிருந்து நடந்து வர அப்போது அபிராமியின் நினைவிடத்தை பார்க்கிறாள். அங்கு அனைவருக்கும் அன்னதானம் கொடுத்துக் கொண்டிருக்க ஒருவர் இங்கு அன்னதானம் ரொம்ப நல்லா இருக்கும் என்று சொல்ல ரேவதி அந்த நினைவிடத்திற்குள் நுழைகிறாள்.

மயங்கி விழுந்த ரேவதி: அங்கு இருப்பவர்கள் கார்த்திக் பற்றி பெருமையாக சொல்ல ரேவதிக்கு யார் அந்த கார்த்திக் என்ற ஆவல் அதிகரிக்கிறது. மறுபக்கம் ரேவதி காணவில்லை என ராஜராஜன் தேடி வர சாமுண்டீஸ்வரிக்கும் தகவல் தெரிந்து, ரேவதியை கார்த்திகை பார்த்துவிட்டால், அவளுக்கு நினைவு வந்துவிடப்போகிறது என 'பயப்படுகிறாள். தூரத்தில் இருந்து கார்த்திக்கை பார்த்த ரேவதி கோவிலுக்கு வர, சாமுண்டீஸ்வரி குடும்பத்தாரும் கோவிலுக்கு வந்து விடுகின்றனர். அன்னதானம் நடக்க அதையும் கார்த்திக் தான் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கின்றனர். யார் அந்த கார்த்திக் என விசாரிக்க அவர்தான் என கார்த்திக்கை கை காட்டுகின்றனர். அந்த சமயத்தில் கார்த்திக் திரும்பியிருக்க ரேவதி அவன் முதுகை தொடர வர திடீரென மயங்கி கீழுந்துவிடுகிறாள். பிறகு கார்த்திக் ரேவதியை பார்த்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து வீட்டுக்கு தகவல் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X