ரேவதிக்கு 2வது திருமணம்.. கதையில் காத்திருக்கும் திருப்பம்.. சூர்யகலா யார்? கார்த்திகை தீபம்!
சென்னை: ஊரில் இருக்கும் அனைவரும் கார்த்திக் பற்றி பெருமையாக சொல்ல ரேவதிக்கு யார் அந்த கார்த்திக் என்ற ஆவல் அதிகரிக்கிறது. வீட்டில் அனைவரும் ரேவதி காணவில்லை என தேடுகின்றனர். சாமுண்டீஸ்வரியோ ரேவதி கார்த்திகை பார்த்துவிட்டால், அவளுக்கு நினைவு வந்துவிடப்போகிறது என பயப்படுகிறாள். அபிராமியின் நினைவு இடத்தில் கார்த்திக்கை பார்க்க ரேவதி வருகிறாள். அந்த நேரம் கார்த்திக் திரும்பியிருக்க ரேவதி அவன் முதுகை தொட வர திடீரென மயங்கி கீழுந்துவிடுகிறாள். பிறகு கார்த்திக் ரேவதியை பார்த்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து வீட்டுக்கு, மயில் வாகனத்திற்கு தகவல் கொடுக்கிறான்.
மருத்துவமனைக்கு வரும் சாமுண்டீஸ்வரி, ரேவதி கார்த்திக் முகத்தை பார்க்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைகிறாள். ஆனால், அதே நேரம், ரேவதி, நர்சிடம் என்னை யார் அட்மிட் செய்தது என்று கேட்க, அந்த நர்ஸ் கார்த்திக் தான் உங்களை அட்மிட் செய்தார் என்று சொல்ல, ரேவதி நான் அவரைத்தான் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால், அவரை பார்க்க முடியாமல் ஆகிவிட்டதே என வருத்தப்படுகிறாள். இதையடுத்து, ரேவதிக்கு ட்ரீட்மென்ட் முடிந்து வீட்டுக்கு வருகிறாள். வீட்டுக்கு வந்த ரேவதியிடம் சாமுண்டீஸ்வரி இனிமே போரடிக்கிதுனு சொல்லி தனியாக வெளியே போகக்கூடாது.. எல்லாம் உன்னுடைய பாதுகாப்பிற்காக தான் சொல்கிறேன் என்று சொல்லி ரேவதிக்கு புரிய வைக்கிறாள். அதைத்தொடர்ந்து கார்த்திக் மயில்வாகனத்திற்கு ஃபோன் செய்து ரேவதி குறித்து விசாரிக்கிறான். மேலும் சாமுண்டீஸ்வரி சூரியகலா என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கும் விஷயத்தையும் விசாரிக்கிறார்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம் சாமுண்டீஸ்வரி சூரியகலாவை தனியாக அழைத்துச் சென்று கார்த்திக் என் மகளின் வாழ்க்கையை கெடுத்து விட்டான். எந்த குடும்பத்தோடு நான் உறவே இருக்கக்கூடாது என்று நினைத்தேனோ அந்த குடும்பத்தில் இருந்து வந்து என்னையும், என் மகளையும் ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கொண்டான். இப்போ ரேவதிக்கும் கார்த்திக்கும் விவாகரத்து நடந்து வருகிறது. அதோடு ரேவதி கார்த்திகை மறந்துவிட்டாள் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நான் அமைத்து தர வேண்டும். அதற்காகத்தான் உன்னை வர சொன்னேன் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட சூர்யகலா, அத்தை ரேவதி இப்படி ஒரு பிரச்சனையில் இருக்கும் போது நிச்சயமாக நான் உதவி செய்கிறேன். என் அண்ணனுக்கு ரேவதியை நான் கல்யாணம் செய்து வைக்கிறேன். இது என்னுடைய பொறுப்பு என சொல்லும், சூர்யகலா, சாமுண்டீஸ்வரியிடம் கார்த்திகை பற்றி கேட்க, அவர் கோட்டை எடுத்து காட்டுகிறாள். கார்த்தியின் போட்டோவை பார்த்த சூர்யாகலா அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











