கார்த்தியை பழி தீர்க்க வந்த சூரியகலா.. நன்றி சொன்ன ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: வீட்டிற்கு வந்த சூர்யகலாவை சாமுண்டீஸ்வரி தனியாக அழைத்துச் சென்று கார்த்திக் என் மகளின் வாழ்க்கையை கெடுத்து விட்டான். எந்த குடும்பத்தோடு நான் உறவே இருக்கக்கூடாது என்று நினைத்தேனோ அந்த குடும்பத்தில் இருந்து வந்து என்னையும், என் மகளையும் ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கொண்டான். இப்போ ரேவதிக்கும் கார்த்திக்கும் விவாகரத்து நடந்து வருகிறது. அதோடு ரேவதி கார்த்திகை மறந்துவிட்டாள் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நான் அமைத்து தர வேண்டும். அதற்காகத்தான் உன்னை வர சொன்னேன் என்று சொல்கிறாள்.
இதைக்கேட்ட சூர்யகலா, அத்தை ரேவதி இப்படி ஒரு பிரச்சனையில் இருக்கும் போது நிச்சயமாக நான் உதவி செய்கிறேன். என் அண்ணனுக்கு ரேவதியை நான் கல்யாணம் செய்து வைக்கிறேன். இது என்னுடைய பொறுப்பு என சொல்லும், சூர்யகலா, சாமுண்டீஸ்வரியிடம் கார்த்திகை பற்றி கேட்க, போட்டோவை காட்டுகிறாள். அந்த பாட்டை பார்த்து ஆத்திரப்படும் சூர்கலாவிற்கு பழைய விஷயம் எல்லாம் நினைவுக்கு வருகிறது. அதாவது, சூர்யகலா கார்த்தியின் அண்ணனை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு சொத்துக்காக வீட்டுக்குள் நுழைந்த விஷயம் தெரிந்து கார்த்திக் இருவரையும் பிரித்து விட்டு, அண்ணனுக்கு சூர்யகலாவை புரிய வைத்து வெளியில் அனுப்புகிறார். இதை சூர்யாகலா நினைத்துப்பார்த்து கார்த்தியை பழிவாங்குவதற்காக நினைக்கிறாள்.

கார்த்திகை தீபம்: கார்த்திக்கை பற்றியே ரேவதி நினைத்துக்கொண்டு இருக்கிறாள், நம்மை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார். அவருக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லையே என நினைக்கும் ரேவதி, ஹாஸ்பிடலுக்கு போன் போட்டு, என்னை யார் அட்மிட் செய்த கார்த்திக் பற்றி சொல்லி அவரின் நம்பரை வாங்குகிறாள். நம்பரை வாங்கிய ரேவதி கார்த்திக்கு போன் செய்து, நான் ரேவதி பேசுகிறேன், உங்களை பார்ப்பதற்காகத்தான் நான் கோவிலுக்கு வந்தேன். ஆனால், அதற்குள் மயங்கி விழுந்துவிட்டேன். நீங்க மக்களுக்கு ரொம்ப நல்ல விஷயத்தை செய்கிறீர்கள் அப்படியே செய்யுங்கள் என சொல்கிறாள். ஊர் முழுக்கவும் உங்களை கொண்டாடுறாங்க.. உங்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லல அதனாலதான் போன் பண்ணி நன்றி சொல்கிறேன் என்று நன்றி சொல்கிறாள்.
சிவனாண்டியின் பிளான்: மறுநாள் நாளை கோவிலில் சாமுண்டீஸ்வரிக்கு முதல் மரியாதை கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடக்க சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வருகின்றனர். மற்றொரு பக்கத்தில் இந்த சாமுண்டீஸ்வரியை இப்படியே வளரவிடக்கூடாது. அவளுக்கு கோவில் முதல் மரியாதை கிடைக்கக்கூடாது அவளை எப்படியாவது கடத்தி கொன்றுவிட வேண்டுமென சிவனாண்டியும், முத்துவேலும் திட்டம் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











