மாஸ்டர் பிளான் போட்டு தப்பிய கார்த்திக்.. குழப்பத்தில் சாமுண்டீஸ்வரி, நடந்தது என்ன?
சென்னை: கோவிலில் அவமானப்படுத்தப்பட்ட சிவனாண்டி, தன்னுடைய சித்தி காளியம்மாளிடம் இந்த குடும்பமே எப்பொழுதும் ஜெயித்துக் கொண்டே இருக்கிறது. சாதாரண கூழ் ஊற்றும் விஷயத்தில் கூட அவர்கள் தான் ஜெயிக்கிறார்கள். நம்மால் எதுவுமே செய்ய முடியாமல் போகிறது. இதே நிலைமை நீடித்தால், இந்த ஊரில் நம்மால் வாழ கூட முடியாது மரியாதையே இருக்காது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் சித்தி என சொல்கிறான் அதைக் கேட்டது காளியம்மாள் நிச்சயமாக ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை போட்டு, இந்த குடும்பத்தையே அழித்து விடுவோம் அமைதியாக இரு என ஒரு திட்டத்தை போடுகிறாள். அதாவது, பரமேஸ்வரியின் பேத்தி நாலு மேலும், தீ மிதிக்க போகிறார்கள். அவர்கள் அனைவரும், அதே தீயில் கருகி சக வேண்டும் அதற்கு ஒரு திட்டத்தை போட்டு இருக்கிறேன் என்கிறாள்.
மறுபக்கம், அருண், கார்த்திக்கிற்கு ஃபோன் போட்டு முக்கியமான மீட்டிங் இருப்பதாக சொல்கிறார். உடனே கார்த்திக் ஆன்லைன் மீட்டிங் தானே கண்டிப்பா அட்டென்ட் பண்ணு என்று வாக்கு கொடுக்கிறேன். இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட சந்திரகலா கார்த்திக்கை சிக்க வைக்க இதுதான் சரியான நேரம் என முடிவெடுக்கிறாள். சாமுண்டீஸ்வரியிடம் சென்று சென்னையில் ஒரு கம்பெனியை உருவாக்கணும்.. அதற்கு இந்த ஆர்டரை எடுக்க வேண்டும் என்று சொல்லி ஒருவழியாக சாமுண்டீஸ்வரியை சம்மதிக்க வைக்கிறாள்.

கார்த்திகை தீபம்: சென்னை மீட்டிங்கில் அமர்ந்து இருக்கும் அருண், சந்திரகலாவை பார்த்துவிட்டு, கார்த்திக்கிற்கு போன் செய்து விஷயத்தை சொல்லுகிறான். இதைக்கேட்ட கார்த்திக் அவங்களுக்கு அங்கு என்ன வேலை என்று, இது எல்லாம் அந்த சந்திரகலாவின் வேலையாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டு இருக்க அப்போது அங்கு வரும் மயில்வாகனத்திடம் கார்த்திக் இந்த விஷயத்தை சொல்கிறான். இதைக்கேட்ட மயில்வாகனம் ஒரு திட்டத்தை கார்த்தியிடம் சொல்ல, கார்த்திக் அதை தன் அண்ணன் அருணிடம் சொல்கிறான். இதைக் கேட்ட அருண் சரியான திட்டமாக இருக்கே என்கிறான். அதன்படியே செய்ய, சந்திரகலாவின் பிளான் மொத்தமும் கொலாப்ஸ் ஆகிறது. இந்த திட்டமும் தோல்வி அடைந்ததால், சந்திரகலா கோவத்தில் இருக்கிறாள்.
தோல்வியடைந்த பிளான்: இதை தொடர்ந்து சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோர் கிளம்பி ஹோட்டலுக்கு வருகின்றனர். ஹோட்டலில் இளையராஜா சர்வர் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின் அவனை பிடித்து நீ ராஜ சேதுபதியின் பேரன் தானே, எங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று மிரட்ட இளையராஜா நான் இல்ல நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லி சமாளித்து விட்டு தப்பிக்கிறான். அதன் பிறகு இருவரும் வெளியே வர இளையராஜா போலவே இன்னொருவன் அங்கிருப்பதை பார்த்து குழப்பம் அடைகின்றனர். இவர்களை பார்த்த இளையராஜா, சாமுண்டீஸ்வரியை பார்த்து என்ன அத்தை சென்னைக்கு வந்து இருக்கீங்க, இங்க என்ன பண்றீங்க என்று கேட்கிறான்.
மைதிலியை கடத்திய முத்துவேல்: மறுபக்கம் கோவிலில் தீ மிதிக்க ஏற்பாடுகள் நடக்க காளியம்மா சொன்னதெல்லாம் ரெடியா என்று ரௌடிகளிடம் கேட்கிறாள். பிறகு முத்துவேல் மைதிலியை கடத்த ஜானகி கார்த்திக்கு தகவல் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











