தீமிதி திருவிழாவில் நடக்க இருக்கும் பயங்கரம்.. முறியடிக்க போவது எப்படி? கார்த்திகை தீபம்!
சென்னை: மீட்டிங்கில் அமர்ந்து இருக்கும் அருண், சந்திரகலாவை பார்த்துவிட்டு, கார்த்திக்கிற்கு போன் செய்து விஷயத்தை சொல்லுகிறான். இதைக்கேட்ட கார்த்திக் அவங்களுக்கு அங்கு என்ன வேலை என்று, இது எல்லாம் அந்த சந்திரகலாவின் வேலையாக இருக்கும் என்று சொல்ல, அப்போது அங்கு வரும் மயில்வாகனம், நான் சொல்லும்படி செய்யுங்க என்று ஒரு திட்டத்தை சொல்கிறான். அதாவது, மீட்டிங் ஆரம்பிக்கும் போது, சாமுண்டீஸ்வரி கழுத்தில், அரிப்பு எற்படுத்தக்கூடிய ஒரு மருந்தை தடவி விட, அவள் கழுத்தை சொறுத்திக்கொண்டே இருக்கிறாள்.
இதனால், மீட்டிங்கில் இருந்து வெளியே வர, அந்த நேரம் பார்த்து அருண், கார்த்திக்கிற்கு போன் செய்து. இப்போ ரூட் கிளியர் நீ வரலாம் என்று சொல்ல, கார்த்திக் மீட்டிங்கிங்கு வந்து அனைவரிடமும் பேசுகிறான். கார்த்திக் மீட்டிங்கில் பேச, அந்த நேரம் சாமுண்டீஸ்வரி இல்லாததால், சந்திரகலா அவளை அழைத்து வருவதற்காக செல்கிறாள். அவள் வருவதற்குள் கார்த்திக் மீட்டிங்கை முடித்து விடுகிறான். இதனால், சந்திரகலாவின் திட்டம் மீண்டும் தோல்வி அடைந்துப்போக, அவள் கடுப்பில் இருக்கிறாள். இதை தொடர்ந்து சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோர் கிளம்பி ஹோட்டலுக்கு வருகின்றனர். ஹோட்டலில் இளையராஜா சர்வர் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கோவிலில் தீ மிதிக்க ஏற்பாடுகள் நடக்க காளியம்மா சொன்னதெல்லாம் ரெடியா என்று ரௌடிகளிடம் கேட்கிறாள். பரமேஸ்வரியின் பேத்திகள் தீ மிக்கும் போது, அவர்களுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றுவார்கள் அதில், பெட்ரோலை ஊற்றிவிடுங்கள் என்கிறாள். அப்போது, சிவனாண்டி, அவர்கள் அது பெட்ரோல் என்று கண்டுபிடித்துவிட மாட்டார்களா என்று சொல்ல, அந்த ரௌடி சார், யாருக்கும் இது பெட்ரோல் என்றே தெரியாது என்கிறான்.
நடக்கப்போவது என்ன: அந்த நேரத்தில் கார்த்திக் அங்கே இருந்தால், காரியம் கெட்டுவிடும் என்பதால், கார்த்தியை திசை திருப்ப மைதிலியை கடத்தி அடைத்து வைத்திருக்கிறான். இதனால் கார்த்திக் ஜானகி வீட்டுக்கு வர ஜானகி நடந்த விஷயத்தை சொல்ல அவன் முத்துவேலுக்கு போன் செய்ய இடத்தை மாற்றி மாற்றி சொல்லி கார்த்தியை அலைய விடுகிறான். ஒரு கட்டத்தில் கார்த்திக்கிற்கு, முத்துவேல் தன்னை அலைய விடுகிறான் என்பதை புரிந்து கொள்கிறான். இதனால், கோவில் திருவிழாவில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொண்ட கார்த்திக் நேராக கோவிலுக்கு வருகிறான். கோவில் தீமிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடக்க சாமுண்டீஸ்வரியின் மகள்கள் நான்கு பேரும் தீ மிதிக்க தயாராகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











