2 புள்ள வேணும்.. கார்த்தி, ரேவதி செம ரொமான்ஸ்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கோவிலில் தீ மிதி திருவிழாவில், பரமேஸ்வரியின் பேத்திகள் தீ மிக்கும் போது, அவர்களுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றுவார்கள் அதில், பெட்ரோலை ஊற்றிவிடுங்கள் என்கிறாள். அந்த நேரத்தில் கார்த்திக் இங்கே இருந்தால், காரியம் கெட்டுவிடும் என்பதால், கார்த்தியை திசை திருப்ப மைதிலியை கடத்தி அடைத்து வைத்திருக்கிறான். இதனால் கார்த்திக் ஜானகி வீட்டுக்கு வர ஜானகி நடந்த விஷயத்தை சொல்ல அவன் முத்துவேலுக்கு போன் செய்ய இடத்தை மாற்றி மாற்றி சொல்லி கார்த்தியை அலைய விடுகிறான்.
ஒரு கட்டத்தில் கார்த்திக்கிற்கு, முத்துவேல் தன்னை அலைய விடுகிறான் என்பதை புரிந்து கொள்கிறான். கார்த்திக் மைதிலியை கடத்தி வைத்திருக்கும் இடத்தை அறிந்து மயில்வாகனத்துடன் சென்று மைதிலியை மீட்க அப்போது முத்துவேலுடன் இருக்கும் நாகராஜ் என்பவனை பிடித்து விசாரிக்கும் போது முத்துவேல், காளியம்மாவின் திட்டம் தெரிய வருகிறது. பின் கோவிலில் தீ மீதி திருவிழா தொடங்கி நடக்க சாமுண்டீஸ்வரி மகள்கள் அனைவரும் எந்த பிரச்னையும் இல்லாமல் நல்லபடியாக தீ மிதிக்க காளியம்மா குழப்பம் அடைகிறாள்.
இந்த சமயத்தில் கார்த்திக் என்ட்ரி கொடுத்து அவர்களது திட்டத்தை முறியடித்தது போலீசில் காளியம்மாவை பற்றி சொல்ல போலீசார் காளியம்மாவை கைது செய்கின்றனர். ஸ்டேஷனுக்கு வரும் கார்த்திக், மோதுவதாக இருந்தால் என்கிட்ட நேரடியாக மோது, என் குடும்பத்தோட மோதாதே என்கிறான். உடனே காளியம்மா இன்னைக்கு வேண்டுமானால் நீ உன்குடும்பத்தை காப்பாற்றி இருக்கலாம், ஆனால், ஒரு நாள் நிச்சயம் அவங்க கதையை முடிப்பேன் என்கிறாள். அப்போது, இதுக்கு மேல என் குடும்பத்து மேல கை வெச்சினா நான் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன், இது நான் உனக்கு கொடுக்கும் வார்னிங் என்கிறான். பதிலுக்கு காளியம்மாளும் நீயா... நானா என்று ஒரு கை பார்த்துவிடலாம் என்கிறாள்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், பரமேஷ்வரி வீட்டில் எல்லாரும் ஒன்று கூடி இருக்க ரேவதியிடம் என்ன வேண்டிகிட்ட என்று கேட்க 2 குழந்தை பெத்துக்கணும் என்று வேண்டிக்கொண்டதாக சொல்கிறாள். தீ மிதித்ததால், அவள் நடக்க முடியாமல் தாங்கி நடக்க கார்த்திக் அவளை கைத்தாங்கலாக அழைத்து செல்ல பரமேஸ்வரி பாட்டி உட்பட எல்லாரும் இதை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.
இதனை தொடர்ந்து ரூமுக்கு சென்ற ரேவதி கால் வலிக்குது என்று ட்ராமா போட கார்த்திக் அவளுக்கு மருந்து போட்டு விடுகிறான். ஒரு கட்டத்தில் ரேவதி நடிப்பை புரிந்து கொண்ட கார்த்திக் பல்லி இருப்பதாக சொல்ல ரேவதி பயந்து ஓடுகிறாள். பிறகு அவளிடம் எதுக்கு இப்படியெல்லாம் பண்ணனும் என்று கேட்க இந்த வலியை கூட தாங்கலைனா எப்படி பிரசவ வலியை தாங்குறது என்று சொல்ல, கார்த்திக் ஒழுங்கா போய் தூங்குங்க என்று சொல்ல ரேவதி பாட்டு பாடி அவனை வெறுப்பேற்றியபடி இருக்கிறாள்.
அடுத்து சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் சென்னையில் இருந்து வீடு திரும்புகின்றனர். அப்போது சந்திரகலா, நாம ஊரில் இல்லாத நேரத்தில் உன் மகள்கள் அனைவரும் பரமேஷ்வரி வீட்டில் தான் இருக்காங்க என்று சொல்ல சாமுண்டீஸ்வரி கடுப்பாகி பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











