கன்னத்தில் விழுந்த அடி.. பழி தீர்க்க காத்திருக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம்!

சென்னை: சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் சென்னையில் இருந்து வீடு திரும்புகின்றனர். அப்போது சந்திரகலா, நாம ஊரில் இல்லாத நேரத்தில் உன் மகள்கள் அனைவரும் பரமேஷ்வரி வீட்டில் தான் இருக்காங்க என்று சொல்ல சாமுண்டீஸ்வரி கடுப்பாகி பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு கிளம்புகிறாள். வீட்டிற்கு வந்ததும் சாமுண்டீஸ்வரி, பரமேஸ்வரியிடம் நீ எப்போது என் வீட்டிற்கு வந்தியோ, அன்னையில் இருந்து,என்னுடைய கணவனும் மகள்களும் என் பேச்சை கேட்பதே இல்லை. இந்த வீட்டுக்கு வருவது தங்குவது என அவங்க இஷ்டப்படி நடக்க ஆரம்பிச்சிட்டாங்க என் பேச்சை யாருமே கேட்கவே இல்லை என்று கத்துகிறாள்.

அப்போது பரமேஸ்வரி, சாமுண்டீஸ்வரியிடம் நான் ஒரு விஷயம் சொல்றேன் நல்லா புரிஞ்சுக்கோ, நம்மளுடைய பிரச்சனையை ஏன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போக வேண்டும். நம்ம பிரச்சனையை நமக்குள்ளேயே முடிச்சுக்கலாம் என்று சொல்கிறாள். அப்போது குறுக்கே வரும் சந்திரலேகா, நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷியா அக்காக்கு எதிராகவே அவர்களுடைய பொண்ணுங்கள கொம்பு சீவி விடுற என்று ஆத்திரத்தில் பரமேஸ்வரியை பிடித்து தள்ள, பரமேஸ்வரி நிலை தடுமாறி விழுகிறாள். இதனால் அனைவரும் பதறி போய் பரமேஸ்வரியை தாங்கி பிடிக்கின்றனர். சந்திரகலாவின் செய்கையால் ஆத்திரப்பட்ட ராஜசேதுபதி, சந்திரகலா கன்னத்தில் பளாரேனா அடிக்கிறான். இதற்கு மேல் இந்த வீட்டில் நீ எதுவுமே பேசக்கூடாது என்கிறான். இதை தொடர்ந்து அனைவருமே வீட்டுக்கு கிளம்பி வருகின்றனர்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: உச்சகட்ட கோவத்தில் இருக்கும் சந்திரலேகா, சாமுண்டீஸ்வரி இடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டும் என சொல்கிறாள். இதை கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி உனக்கு இதே வேலையா போச்சு, எனக்கு வேற வேலை இருக்க அதை பார்த்துவிட்டு வருகிறேன். அதன் பிறகு பேசலாம் என்று தன்னுடைய அறைக்கு சென்று விடுகிறாள். அப்போது, சந்திரகலா, பரமேஸ்வரி பாட்டி வீட்டில், கண்ணாமூச்சி விளையாடிய போது துர்காவின் கழுத்தில் இருந்து தாலி வீடியோ காட்டுகிறாள். இதைப்பார்த்து ராஜசேதுபதி அதிர்ச்சி அடைகிறான். நான் யாருனு தெரியாமல் என்னை அடிச்சிட்டீங்க, இந்த வீடியோவை நான் இப்போ அக்கா கிட்ட காட்டுகிறேன். அப்போ தெரியும் நான் யார் என்று சொல்லிவிட்டு செல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அப்போது மயில்வாகனன், இப்போதைக்கு சாமுண்டீஸ்வரி அத்தை அந்த ரூமில் இருந்து வெளியே வராதபடி பார்த்துக்கொள் ரேவதி, அதற்குள் நான் சந்திரகலாவிடம் இருக்கும் போனை எடுத்து அந்த வீடியோவை டெலிட் செய்து விடுகிறேன் என்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X