கார்த்தியை கவர ரேவதி போடும் பிளான்.. கார்த்திகை தீபம்!
சென்னை: சிவனாண்டி, காளியம்மாவிடம் சாமுண்டீஸ்வரியை பழிவாங்க உதவி கேட்கிறார். அதைத்தொடர்ந்து, சிவனாண்டி, பரமேஸ்வரி பாட்டியிடம் வேண்டுமென்றே வம்பு இழுத்து பேசுகிறான். அப்போது, பரமேஸ்வரி பாட்டி, என்னப்பா, உன்னோட தினமும் அதே தொல்லையா போச்சு, நானே என்னுடைய பேத்திங்களோட சந்தோஷமா இந்த கோவிலுக்கு வந்தா, நீ இப்படி தொல்லை பண்ணிக்கிட்டே இருக்க கோவிலோட பழக்க வழக்கம், முறைனு ஒன்னு இருக்குது. அதை தான் நாங்க செய்து கொண்டு இருக்கிறோம் என்று சொல்ல, அப்போது, காளியம்மா என்ட்ரி கொடுத்து, அந்த பழக்க வழக்கததை கொண்டு வந்ததே நீங்களும் உங்க புருசனும் தானே. போ அந்த வழக்கத்தை ஒருமுறை மாத்துனா தாப்பு இல்லை என்று சொல்கிறாள்.
காளியம்மாவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைத்து நிற்கின்றனர். தொடர்ந்து, இருவருக்கும் பரமேஸ்வரிக்கும் காளியம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது அப்போது, கோயில் பூசாரி, இந்த ஊரில் இரண்டு பேரும் பெரியவர்கள் தான். இதனால், சாமி முன்னடி பெயர் எழுதி போடுவோம், யாருடைய பெயர் வருகிறதோ அவர்கள் முதலில் பூஜை செய்யட்டும் என்று பெயர் எழுதி போட, அதில், பரமேஸ்வரி பாட்டியில் பெயர் வருகிறது.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சிவனாண்டி, இந்த தேர்தலில் நான் தோற்றுவிட்டாள், சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு போய் பணிவிடை செய்ய வேண்டும். தேர்தலில் ஜெயித்துவிடுவேன் என்ற நம்பிக்கையில், சவால் விட்டு விட்டேன். ஆனால், அந்த கார்த்தி எல்லாத்தையும் கெடுத்துவிட்டான். என்னால், சாமுண்டீஸ்வரி வீட்டில் வேலை செய்ய முடியாது என்று சொல்ல காளியம்மாள் ரகசியமாக ஒரு திட்டத்தை சொல்கிறாள். அதன் பின், காளியம்மா ஏற்பாடு செய்த அடியார்கள் ஸ்கூலில் இருந்து ஓட்டு பதிவான பெட்டியை தூக்க திட்டம் போடுகிறாள். அடியார்களின் பெட்டியை தூக்க பள்ளிக்குள் நுழைய அறிவாளுடன் அங்கு காவலுக்கு காத்திருக்கும் கார்த்திக் எல்லோரையும் அடித்து ஓட விடுகிறான். இதனால் காளியம்மாவின் திட்டம் தோல்வியடைகிறது.
ரேவதி,கார்த்திக்: அதைத்தொடர்ந்து, ஊரில் ஆடிமாத பௌர்ணமி தினத்தன்று வீட்டில் சமைத்த உணவை கணவன் மனைவி கடற்கரை நிலவு வெளிச்சத்தில் சாப்பிட்டால் கணவன் மனைவி இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும் என்பது ஐதீகம் என்று சொல்கின்றனர். ரேவதி இந்த விஷயத்தை கார்த்தியிடம் சொல்லி பாட்டி தான், கடற்கரைக்கு போய் நிலா வெளிச்சத்தில் இருக்க சொன்னதாக சொல்கிறாள். இதைக்கேட்ட கார்த்திக், எனக்கு இதில் எல்லாம் உடன்பாடு இல்லை என்று சொல்லும் கார்த்திக், இதை நானே நானே பாட்டியிடம் கேட்கிறேன் என்று சொல்லித் திரும்ப ரேவதியும் பரமேஸ்வரி பாட்டிக்கு சைகை காட்ட பாட்டியும் ஆமாம் நான் தான் சொன்னேன் என்று சமாளிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











