ரத்த வெள்ளத்தில் சந்திரகலா.. தவறான முடிவெடுத்த கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், செங்கல் சூளையில் வேலை செய்யும் ஆட்கள், சாமுண்டீஸ்வரியின் வீட்டிற்கு வந்து இனிமேல் கார்த்திக் வர மாட்டாரா என்று கேட்கின்றனர். அதை கேட்ட சாமுண்டீஸ்வரி இனி மேல் அவர் வரமாட்டார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் வருவார் என்று சொல்கிறாள். இதையடுத்து, அங்கு வேலை செய்தவர்கள், கார்த்திக் இருக்கும் வரை எல்லாம் சரியாக நடந்தது, எங்களை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். எங்களை நன்றாக பார்த்துக்கொண்டவருக்கு இப்போது பிரச்சனையில் இருக்கிறார். அவருக்காக நாங்க பேச வந்து இருக்கிறார். மீண்டும் கார்த்திக் வரவில்லை என்றால், நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று சொல்கின்றனர்.
இதையடுத்து இன்றைய எபிசோடில், தொழிலாளர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்க கடுப்பான சந்திரகலா, இனி மேல் அவன் வரமாட்டான், அவன் உங்க குடும்பத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டான். அவனை மீண்டும் இந்த வீட்டில் சேர்க்க வேண்டுமா? ஒழுங்கா வேலையை பாருங்க என்று சொல்கிறாள். இதையடுத்து, சாமுண்டீஸ்வரி அந்த சூளை என்னிடம் இருந்தால் தானே, நீங்க கார்த்திக் வரவேண்டும் என சொல்லுவீங்க, இனி மேல் அந்த செங்கல் சூளை என்னுடைய இல்லை, நான் விற்றுவிடுகிறேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மயில்வாகனமும் சாமுண்டீஸ்வரியிடம் இது வேண்டாம் என்று பேசுகிறான். ஆனாலும் சாமுண்டீஸ்வரி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள்.

கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரியின் இந்த முடிவால் சந்தோஷப்படும் சந்திரகலா, இந்த விஷயத்தை, காளியம்மா, சிவனாண்டி ஆகியோரை சந்தித்து சாமுண்டீஸ்வரி, சூளையை விற்கும் விஷயத்தை சொல்கிறாள். அதன்பின், காளியம்மா சந்திரகலாவிடம் ஒரு திட்டத்தை சொல்கிறாள். இதைக்கேட்டு சந்தோஷப்படும் சந்திரகலா, இந்த விஷயத்தை வைத்தே, கார்த்திக்கின் கதையை முடித்துவிட வேண்டும் என இருவரும் சேர்ந்து ஒரு திட்டத்தை போடுகின்றனர். அந்த திட்டத்தின் படி சந்திரகலா ஒரு ஆளை ஏற்பாடு செய்து, கார்த்தியிடம் சென்று சாமுண்டீஸ்வரி செங்கல் சூளையை விற்க போகிறார்கள். இதனால், சூளையில் பெரிய பிரச்சனை நடக்கிறது என்று சொல்ல கார்த்திக் பதறி அடித்துக்கொண்டு அங்கு செல்கிறான். ஆனால், அங்கு சந்திரக்கலா மட்டும் இருக்கிறாள். உடனே சந்திரகலா, என்ன கார்த்திக் இந்த இடத்தில் நான் மட்டும இருக்கேனு பாக்குறியா... எல்லாம் என்னுடைய பிளான் தான், என் புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிய, உனக்கு தண்டனை தரவேண்டாமா.. என் சொல்லி, கையில் மறைத்துவைத்து இருந்த கத்தியை எடுத்து தன்னைத்தானே வயிற்றில் குத்திக்கொள்கிறாள்.
ரத்த வெள்ளத்தில் சந்திரா: இதைப்பார்த்து பதறிப்போன கார்த்திக், என்ன இது பைத்தியக்காரத்தனம், என்னை பழிவாங்குவதற்காக என்ன வேணும்னாலும் செய்வீங்களா, வாங்க ஹாஸ்பிடல் போகலாம் என்கிறான். கார்த்திக், உன்னை பழிவாங்குவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். இதுக்கு மேல நீ, என் அக்கா குடும்பத்தோட சேரவேக்கூடாது என சொல்கிறாள். அந்த நேரத்தில் அங்கு வரும் சாமுண்ஸ்வரி, சந்திரா ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து பதறுகிறாள். கார்த்திக் சூளைக்கு வருவதற்கு முன்பே, சந்திரா, சாமுண்டீஸ்வரிக்கு போன் செய்து, கார்த்திக் என்னை கத்தியால் குத்திவிட்டான் என சொல்லி இருந்தார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











