கார்த்திக், ரேவதியை பிரிக்க திட்டமிடும் சந்திரகலா.. சாமுண்டீஸ்வரியின் முடிவு என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியல், கார்த்திக் செங்கல் சூளைக்கு வந்ததும் சந்திரகலா அவனிடம் வாக்குவாதம் செய்து விட்டு தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்டு கார்த்திக் குத்தி விட்டதாக நாடகம் ஆடுகிறாள். இதையடுத்து சாமுண்டீஸ்வரி அங்கு வர சந்திரகலா கார்த்திக் மீது பழி போட்டு நடிக்கிறாள். கார்த்தியிடம் கோபப்படும் சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறாள். அங்கும் சந்திரகலா, கார்த்திக் என்னை குத்திட்டான்.. அவனை சும்மா விட கூடாது என்று ஏற்றி விடுகிறாள். இதனால், கோபமடையும் சாமுண்டீஸ்வரி நேராக போலீஸ் ஸ்டேஷன் கார்த்திக் மீது கம்பளைண்ட் கொடுக்கிறாள்.

காவல்நிலையத்தில் கார்த்திக், அத்தை நான் அவர்களை குத்தவில்லை என்று எடுத்து சொல்கிறான். அதை காதில் வாங்கிக்கொள்ளாத சாமுண்டீஸ்வரி, பொய் சொல்லி என்னை ஏமாற்றி என் மகளை திருமணம் செய்து கொண்டான். இதற்கு எல்லாம் காரணம் என் தங்கை தான் என்கிற ஆத்திரத்தில் இப்படி செய்துவிட்டான் என்று சொல்ல, போலீசார் கார்த்திகை கைது செய்கின்றனர். கார்த்திக்கிடம் கோபமுடன் பேசும் சாமுண்டீஸ்வரி இதற்கு மேல தான் இந்த சாமுண்டீஸ்வரி யார் என்பதை பார்க்கப் போற, பொய் சொல்லி ஏமாத்தி துரோகம் செஞ்சிருக்க அதை நான் என்னைக்குமே மறக்கவே மாட்டேன் என்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: கார்த்திக் சிறையில் இருக்கும் விஷயம் தெரிந்த, ரேவதி கார்த்தியை பார்க்க கிளம்ப சந்திரகலா, நீ எதுக்கு அவனை பார்க்க போற என்று எனகேட்கிறாள். இதனை தொடர்ந்து ராஜராஜன் நீ எதுக்கு அவளை ஏற்றி விட்டுட்டு இருக்க என்று சந்திரகலாவை சத்தம் போடுகிறார். அப்போது ரேவதி, கார்த்திக் என்னை தொட்டு தாலி கட்டுன புருஷன் அவனை நான் பார்ப்பேன் என்று கிளம்பி கார்த்திகை பார்க்க வருகிறாள். கார்த்தியை பார்த்து கதறி அழும் ரேவதி, என்ன நடந்தது என விசாரிக்கிறாள். அப்போது கார்த்தி, சூலையில் பிரச்சனை என எனக்கு போன் வந்ததால், அங்கு நான் சென்றேன். ஆனால், சந்திரகலா தன்னைத்தானே குத்திக்கொண்டு என் மீது பழி போட்டு விட்டாள் என்ன சொல்கிறார்.

பிரிக்க நடக்கும் சதி: அப்போது ரேவதி, சித்தி இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வார்கள் என நான் நினைக்கவே இல்லை. இதிலிருந்து நான் உன்னை எப்படி மீட்டுக் கொண்டு வருவது என பதற்றப்படுகிறார், அப்போது கார்த்தி, இதற்கு மேல் தான் நீ வீட்டில் கவனமாக இருக்க வேண்டும். சந்திரகலா, அத்தையை அழிப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்வார் என சொல்கிறாள். மறுபக்கம், வீட்டில் சந்திரகலா, கார்த்தியையும் ரேவதியையும் பிரிக்கணும். இல்லனா அவ இப்படி தான் அவனை தேடி போவா, இப்படி ஒரு ஏமாத்துக்காரன் கூட ரேவதி வாழவேண்டாம் இருவருக்கும் விவாகரத்து வாங்கிவிடலாம் என்று ஏற்றி விட சாமுண்டீஸ்வரி ஒரு முடிவு கட்டுறேன் என்று சொல்கிறாள். இதை தொடர்ந்து ரேவதி வீட்டிற்கு வந்தும் கேஸை வாபஸ் வாங்குங்க.. என் புருஷனை வெளியே எடுங்க என்று சொல்லி சத்தம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X