பஞ்சாயத்தை கூட்டிய சாமுண்டீஸ்வரி.. கார்த்தியை விவாகரத்து செய்த ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை சந்திக்கும், ரேவதி, சித்தி இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வார்கள் என நான் நினைக்கவே இல்லை. இதிலிருந்து நான் உன்னை எப்படி மீட்டுக் கொண்டு வருவது என பதற்றப்படுகிறாள், அப்போது கார்த்தி, இதற்கு மேல் தான் நீ வீட்டில் கவனமாக இருக்க வேண்டும். சந்திரகலா, அத்தையை அழிப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்வார் என சொல்கிறாள். மறுபக்கம், வீட்டில் சந்திரகலா, கார்த்தியையும் ரேவதியையும் பிரிக்கணும். இல்லனா அவ இப்படி தான் அவனை தேடி போவா, இப்படி ஒரு ஏமாத்துக்காரன் கூட ரேவதி வாழவேண்டாம் இருவருக்கும் விவாகரத்து வாங்கிவிடலாம் என்று ஏற்றி விட சாமுண்டீஸ்வரி ஒரு முடிவு கட்டுறேன் என்று சொல்கிறாள்.

13 zee tamil Karthigai Deepam
Photo Credit:

இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தைகூட்டி, கார்த்திக் ரேவதி இருவரையும் பிரித்துவிட வேண்டும் என சொல்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரப்படும் பரமேஸ்வரி பாட்டி, பிரிய வேண்டும் என முடிவு எடுக்க வேண்டியது நீ இல்லை, புருஷன் பொண்டாட்டி. உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றால், அவங்க சேர்ந்து வாழக்கூடாதா என்று சொல்கிறார். அப்போது, பஞ்சாயத்து தலைவர், இவங்க சொல்வதும் நியாயம் தான், உங்களுக்கு மாப்பிள்ளையை பிடிச்சா என்னா, பிடிக்கவில்லை என்றால் என்ன? இந்த விஷயத்தில் உங்க மகள் என்ன முடிவு எடுக்கிறாளோ அதை வைத்துத்தான் தீர்ப்பு சொல்ல முடியும் என்கிறாள். அப்போது, சாமுண்டீஸ்வரி அவ என் மக, நான் சொன்னதைத்தான் கேட்பாள் என்று சொல்கிறாள். அப்போது சந்திரகலா அக்கா, நிச்சயமா ரேவதியை கார்த்திகை பிரிகிறேன் என்று சொல்ல மாட்டாள், நீ தலைகீழா நின்னாலும் அது நடக்காது என்று சொல்கிறாள். உடனே சாமுண்டீஸ்வரி, தெரியும் சந்திரகலா, ஆனால், நான் சொல்லும் விதத்தில் சொன்னால், நிச்சயம் அவ விவாகரத்துக்கு ஒத்துக்கொள்வாள் என்கிறாள்.

கார்த்திகை தீபம்: அப்போது பரமேஸ்வரி பாட்டி, பஞ்சாயத்துக்காரர்களிடம், சாமுண்டீஸ்வரி என் பேத்தி ரேவதியை மிரட்டி விவாகரத்து செய்ய வைத்துவிடுவாள், இதனால் ஊர் தலைவர்கள் நேரடியாக வீட்டுக்கு போய் ரேவதியிடம் கேளுங்கள் என்று சொல்ல, பரமேஸ்வரி சொல்வதும் சரிதான் என அனைவரும் கிளம்பி சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு செல்கின்றனர். வீட்டிற்கு போன சாமுண்டீஸ்வரி, ரேவதியிடம் கார்த்திகை விவாகரத்து செய்ய வேண்டும் என சொல்ல, ஆத்திரப்படும் ரேவதி. உங்க விருப்பத்திற்கு நான் வாழமுடியாது, அவர் என் கணவர் நான் அவரை விவாரத்து செய்ய மாட்டேன் என்று சொல்கிறாள். அப்போது சாமுண்டீஸ்வரி நீ மட்டும் அப்படி சொல்லவில்லை என்றால் நான் உயிரோடு இருக்கவே மாட்டேன் என்று சொல்ல, இதை சொல்லித்தான் என் வாழ்க்கையில் விளையாடுறீங்க, இனி என்ன நடந்தாலும் நான் கார்த்திக்கை விட்டு பிரிய மாட்டேன் என்று சொல்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X