விஷம் குடித்த ரேவதி.. கலங்கி நிற்கும் கார்த்திக்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திக் மற்றும் ரேவதியை கோவில் வைத்து காசு வெட்டி போட்டு பிரித்துவிடுகிறாள் சாமுண்டீஸ்வரி. சந்திரகலா நடந்ததை நினைத்து சந்தோசப்பட ரேவதி மிகுந்த வருத்தத்தில் கண்ணீருடன் இருக்கிறாள். வீட்டில் பரமேஸ்வரி பாட்டி, ரேவதி எதுக்கு இப்படி செய்தாள், அவள் இப்படி செய்வாள் என்று நான் நினைக்கவே இல்லை என்று சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது, கார்த்திக், ரேவதி இதை விருப்பப்பட்டு பண்ண மாதிரி தெரியல, அவ நான் வெளியே வரணும்னு செய்த மாதிரி இருக்கு.. என்னையும் ரேவதியையும் யாராலயும் பிரிக்க முடியாது, இந்த ஜென்மதில் ரேவதி தான் என் மனைவி என்கிறார்.

மறுபக்கம் வீட்டில் கார்த்திகை விட்டு பிரிந்ததை நினைத்து மனவேதனையில் இருக்கும், ரேவதி விஷத்தை குடிக்கிறாள். வீட்டில் ரேவதியை கார்த்திக் நினைத்துக்கொண்டு இருக்க, கார்த்திக்கு திடீரென ஏதோ தப்பா நடப்பது போல் உள்மனசு சொல்ல உடனே ரேவதிக்கு ஃபோன் செய்கிறான். விஷம் குடித்து மயங்கிய ரேவதி போனை எடுக்காததால் கார்த்திக் சந்தேகப்படுகிறான். பின் ரோகினி, ரேவதி மயங்கி கிடப்பதை பார்த்து அலறி கத்த அனைவரும் ஓடி வருகின்றனர். ரேவதியின் இந்த நிலைமைக்கு காரணம் சாமுண்டீஸ்வரி தான் என ரோகினி, மயில்வாகனம், ராஜராஜன் என எல்லாரும் கோவப்படுகின்றனர்.

கார்த்திகை தீபம்: இதனை தொடர்ந்து சாமுண்டீஸ்வரி ரேவதியை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். இந்த விஷயத்தை மயில்வாகனம் கார்த்திக்கிடம் சொல்ல கார்த்திக் கதறி அழுகிறான். இதையடுத்து, கார்த்திக், பரமேஸ்வரி பாட்டி இருவரும் மருத்துவமனைக்கு செல்ல. ரேவதியை பார்க்க விடாமல் சாமுண்டீஸ்வரி தடுக்கிறாள். முதலில் டாக்டர் ரேவதியை காப்பாற்றுவது கஷ்டம் என சொல்ல அனைவரும் பதறுகின்றனர். இதைக்கேட்ட கார்த்திக், கோவிலுக்கு சென்று கடவுளிடம் பிராத்தனை செய்கிறான். தீவிர சிகிச்சைக்கு பிறகு ரேவதி கண்விழிக்க டாக்டர் ரேவதி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மயில்வானம் கார்த்திக்கிற்கு ஃபோன் செய்து சொல்கிறார்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கதறும் கார்த்திக்: கார்த்திக் ரேவதியை பார்க்க வேண்டும் என்று சொல்கிறான். அப்போது மயில்வாகனம், ஹாஸ்பிடலில் அத்தை இருக்காங்க, நான் சரியான நேரம் பார்த்து சொல்கிறேன் என மயில்வாகனம் ஒரு திட்டத்தை போட்டு, சாமுண்டீஸ்வரி, சந்திரகலா இருவரையும் திசை திருப்பிவிட்டு கார்த்திகை அழைத்து வருகிறார். ரேவதியை பார்த்த கார்த்திக் கண்கலங்கியபடி, என்ன பைத்தியக்காரத்தனமான முடிவு, இனி என்ன நடந்தாலும் இப்படி ஒரு முடிவு எடுக்கக்கூடாது, இந்த ஜென்மத்தில் நீ தான் என் பொண்டாட்டி என்று சொல்கிறான். இதைக்கேட்டு ரேவதி கதறி அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவதுஏ என்ன? சாமுண்டீஸ்வரி எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X