கார்த்திக், ரேவதி மீண்டும் இணைவார்களா? சந்திரகலாவுக்கு காத்திருந்த பல்பு.. கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: மருத்துவமனையில் இருக்கும் ரேவதியை பார்க்க கார்த்திக் மற்றும் பரமேஸ்வரி பாட்டி வருகின்றனர். அவர்களை தடுத்துநிறுத்தும் சாமுண்டீஸ்வரி, உன்னாலத்தான் என் மகள் இந்த நிலையில் இருக்கிறாள். இப்போ அவளை பாக்க வந்து இருக்கியா என கேட்டு இருவரும் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி விடுகிறாள். இதையடுத்து, மயில்வாகனத்திடம் கார்த்திக், ரேவதியை பார்க்க வேண்டும் என சொல்கிறான். அப்போது மயில்வாகனம், ஹாஸ்பிடலில் அத்தை இருக்காங்க, நான் சரியான நேரம் பார்த்து சொல்கிறேன் என மயில்வாகனம் ஒரு திட்டத்தை போட்டு, சாமுண்டீஸ்வரி, சந்திரகலா இருவரையும் திசை திருப்பிவிட்டு கார்த்திகை அழைத்து வருகிறார். ரேவதியை பார்த்த கார்த்திக் கண்கலங்கிய அழுகிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

இன்றைய எபிசோடில், என்ன பைத்தியக்காரத்தனமான முடிவு, இனி என்ன நடந்தாலும் இப்படி ஒரு முடிவு எடுக்ககூடாது, இந்த ஜென்மத்தில் நீ தான் என் பொண்டாட்டி என்று சொல்கிறான். இதைக்கேட்டு ரேவதி கதறி அழுகிறாள். நீ இதை விருப்பப்பட்டு செய்யலனு எனக்கு தெரியும்.. உன்னையும் என்னையும் யாராலயும் பிரிக்க முடியாது தைரியமாக இரு என்று சொல்கிறான். மேலும், எந்த சூழ்நிலையிலும் நீ இப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய் என்று சொல்ல, ரேவதி,கார்த்திக்கின் கையைபிடித்து சத்தியம் செய்கிறான்.
அதனை தொடர்ந்து கார்த்திக் வெளியே செல்லும் போது சாமுண்டீஸ்வரி பார்த்து விடுவாளோ என்று பில்டப் காட்சிகள் எகிற சாமுண்டேஸ்வரி கண்ணில் படாமல் கார்த்திக் எஸ்கேப் ஆகிறான்.

கார்த்திகை தீபம்: அதன்பிறகு சந்திரகலா ரேவதியிடம் ஏன்மா இப்படி பண்ண என்று கேட்க ரேவதி நீங்க உங்க புருஷன் கூட வாழ்ந்து இருந்தா உங்களுக்கு இந்த வலி தெரியும் என்று பதிலடி கொடுக்க ஆத்திரப்படும் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் பாத்தியா என் மகள் எப்படி சொல்றா பாரு, நான் நீ தான் முக்கியம் என்பதால் தான் உன் கூட இருக்கேன் என்று கோர்த்து விடுகிறாள். மறுபக்கம் கார்த்திக், ரேவதி குணமானத்திற்காக நன்றி சொல்ல கோவிலுக்கு வந்து மனம் உருகி வேண்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X