கார்த்திக்கை பிரிந்த ரேவதி.. தாலியை கழட்டிய சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கோவில் கும்பாபிஷேகத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்க. அதை தடுக்கும் நோக்கத்தோடு. சந்திரகலா மற்றும் காளியம்மாள் டீம் கோவிலுக்குள் வெடிகுண்டை வைத்து விடுகின்றனர். இந்த விஷயத்தை காளியம்மாள் கார்த்திகேயிடம் சொல்லி, நீதான் ராஜராஜனின் பேரன் என்றால் உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல வேண்டும். நீ உண்மையை சொல்லிவிட்டால், வெடி குண்டு இருக்கும் இடத்தை நான் சொல்கிறேன். அப்படி சொல்லவில்லை என்றால், உன்னோட குடும்பம், அந்த ஊர் மக்கள் எல்லாரும் சாக வேண்டியது தான் என்கிறாள்.
இதனால் பதறிப்போன கார்த்திக், வேறு வழியே இல்லாமல் சாமுண்டீஸ்வரியிடம், நான் தான் ராஜசேதுபதியின் பேரன் கார்த்திக் என்கிற உண்மையை சொல்கிறான். இதை கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, கூடவே இருந்து என்னை நம்ப வெச்சி, இப்படி துரோகம் செய்துட்டியே, உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன். இதற்குமேல் உனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கு மேல் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடக்காது, என் கணவர் இதை செய்ய மாட்டார் என்று, ராஜ ராஜனை அழைக்கிறார். ராஜராஜன் நான் வரமாட்டேன், கும்பாபிஷேகத்தை நடத்தி விட்டு வருகிறேன். இதற்காக இவ்வளவு கோவப்படுற சாமுண்டீஸ்வரி கொஞ்சம் அமைதியாக இரு, மாப்பிள்ளை நம்ப குடும்பம் ஒன்றாக சேர வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்தார் என சொல்கிறார்.

கார்த்திகை தீபம்: யார் என்ன சொன்னாலும், சமாதானம் ஆகாத சாமுண்டீஸ்வரி, இப்போ நீங்க என் கூட வரவில்லை என்றால், இந்த கோவில் என்னுடைய தாலியை நான் அறுத்துவிட்டு உங்களுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று சென்று விடுவேன் என தாலியை அறுப்பதற்காக செல்கிறாள். கார்த்திக் அதை தடுத்து நிறுத்திவிட்டு, மாமா நீங்க அத்தையுடன் போங்க என சொல்கிறார். சாமுண்டீஸ்வரியின் கோவத்தால், மனம் நொந்துபோன ராஜராஜன், மனம் இல்லாமல் கழுத்தில் இருந்த மாலையை கழட்டிப் போட்டுவிட்டு சாமுண்டீஸ்வரியிடம் வருகிறார்.
கார்த்திக்கை பிரிந்த ரேவதி: பின், கார்த்திக்கின் அருகில் நின்றிருந்த ரேவதியை பார்த்த, சாமுண்டீஸ்வரி இன்னும் ஏன் அவன் பக்கத்துல இருக்க, அத்தனை நாளா நல்லவன் போல பொய் சொல்லி நாடகமாடியவன், உன்னை எதுவேண்டுமானாலும் செய்வான், இதற்கு மேல் நீ என்கூட தான் இருக்கணும். உனக்கும் கார்த்திக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என ரேவதியின் கையை பிடித்து இழுக்கிறாள். ஆனால், ரேவதி கார்த்திகை விட்டு பிரிய மனமில்லாமல் அம்மா தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். கார்த்திக் எந்தவிதமான தவறையும் செய்யவில்லை என சொல்ல சாமுண்டீஸ்வரி உனக்கு அம்மா வேணுமா.. கார்த்திக் வேண்டுமா.. என நீயே முடிவு செய்து கொள் என்று சொல்ல, ரேவதி எதுவுமே பேச முடியாமல் கண்ணீருடன் கார்த்திகை விட்டு பிரிந்து செல்கிறாள்.
இதை அடுத்து சாமுண்டீஸ்வரி, இதற்கு மேல், உங்களுக்கும் என்னுடைய குடும்பத்திற்கும், இந்த கோயிலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, எந்த நல்லது கெட்டதிற்கும் இனிமேல் நாங்க வரமாட்டோம் என கோவிலிலேயே தலையில் தண்ணீர் ஊற்றி, இந்த குடும்பத்தை இத்தோடு தலை முழுகுகிறேன் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











