மாஸ் என்ட்ரி கொடுத்த கார்த்திக்.. திகைத்துப்போன சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் !

சென்னை: கார்த்திக் இல்லாமல் சூளையில் வேலை செய்ய மாட்டோம் என்று தொழிலாளர்கள் சொல்கின்றனர். இதை சாதமாக்கிக் கொள்ள நினைத்த சந்திரகலாவின் தூண்டுதலால் சாமுண்டேஸ்வரி சூளையை ஏலம் விட முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. அதாவது, சாமுண்டீஸ்வரி சூளையை ஏலம் விடும் விஷயம் கார்த்திக்கு தெரிய வந்து சூளையில் வேலை செய்பவர்களுக்காக சூளையை கைப்பற்ற வேண்டும் என்று முடிவெடுக்கிறான். இதனை தொடர்ந்து சந்திரகலா யாரெல்லாம் இந்த ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதோ அவர்களை எல்லாம் சந்தித்து இந்த ஏலத்தை நாங்க எடுக்க போறோம். நீங்க பங்கேற்க வேண்டாம் என்று சொல்லி அவர்களை ஏலத்தில் கலந்து கொள்ளாமல் செய்துவிடுகிறாள்.

மேலும் அவர்களுக்கு பணத்தை கொடுத்து சம்மதிக்கவும் வைக்கிறாள். இதையடுத்து சந்திரகலா சந்தித்த நபர்கள் அனைவரும் கார்த்திக் ஏற்பாடு செய்தவர்கள் என்பது தெரிய வருகிறது. அடுத்த நாள் காலையில் சாமுண்டீஸ்வரி, சந்திரகலா ஆகியோர் ஏலத்திற்கு கிளம்ப அந்த கார்த்திக்கு பாடம் புகட்டுறேன் என்று டைலாக் பேசுகிறாள். இதையடுத்து சந்திரகலா நான் ஏதோ பண்ணி இருக்கேன்.. ஆனால் அந்த கார்த்திக் புத்திசாலி ஏதாவது பண்ணவும் வாய்ப்பு இருக்கு என்று யோசிக்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இப்படியான நிலையில் கார்த்திக் தனது கம்பேனியில் இருந்து மேனேஜரை அனுப்பி செங்கல் சூளையை ஏலம் எடுக்க சொல்கிறார். 50லட்சத்தில் தொடங்கிய ஏலம் ஒரு கோடி வரை சென்றுவிட, சந்திரகலா திகைத்துப்போய் யார் இவர், இவன் எதற்காக ஏலம் எடுக்கிறான். நாம போட்டு வைத்த திட்டம் எல்லாம் வீணாகிவிட்டதே என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார். அப்போது, ஏலம் முடிந்துவிட்டது, நீங்கள் பணத்தை கொடுத்துவைத்து கையெழுத்து போடுங்க என்று சொல்கிறார். அப்போது , கார்த்தியின் மேனேஜர், நான் கம்பேனியின் மேனேஜர் தான் என் பாஸ் வைத்து கையெழுத்து போடுவார் என்று சொல்கிறார்.

அந்த நேரத்தில் ஆடி கார் ஒன்று வேகமாக வந்து நிற்க அதில், சூட் கேட் போட்டுக்கொண்டு மாஸ் லுக்கில் கார்த்திக் வருகிறார். இத்தனை நாட்களாக கார்த்தியை டிரைவராக பார்த்த சாமுண்டீஸ்வரி கார்த்தியின் லுக்கைப் பார்த்து திகைத்துப்போய் நிற்கிறார். இதற்கு மேல் தான் மருமகன் மாமியார் சண்டை கார்த்திகை தீபம் சீரியலில் கலைக்கட்டப்போகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X