மாப்பிள்ளை திமிர அடக்கணும்.. கார்த்திக், ரேவதியை நிரந்தரமா பிரிக்கணும்.. கார்த்திகை தீபம்!

சென்னை: செங்கல் சூளையை ஏலத்தில் எடுக்க கார்த்திக் சூட் கேட் போட்டுக்கொண்டு மாஸ் லுக்கில் வருகிறார். இத்தனை நாட்களாக கார்த்தியை டிரைவராக பார்த்த சாமுண்டீஸ்வரி கார்த்தியின் லுக்கைப் பார்த்து திகைத்துப்போய் நிற்கிறார். அதோடு மட்டுமில்லாமல் சூளையை ஏலத்தில் எடுத்த கார்த்திக், அத்தை நம்ம சொத்து கைவிட்டு போகக்கூடாது என்று தான் நான் ஏலத்தில் எடுத்தேன். இது பத்திரம் உங்களிடமே இருக்கட்டும் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி கோவப்பட்டு திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறாள். அதே போல மருத்துவமனையில் இருந்து வந்த ரேவதி, கார்த்தியை சந்திக்க சென்றிருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

அதாவது ரேவதி வீட்டில் இல்லாததால் சாமுண்டீஸ்வரி கடுப்பாகி சத்தம் போடுகிறாள். சந்திரகலா ரேவதி கார்த்தியை தான் சந்திக்க சென்றிருப்பாள் என்று சொல்லி ஏற்றி விடுகிறாள். இதனால் சாமுண்டீஸ்வரி ஒரு கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ரேவதி காணவில்லை என கம்ப்ளைன்ட் கொடுக்க வெளியே கிளம்ப ரேவதி எதிரில் வருகிறாள். எங்கடி போயிட்டு வந்த என்று சாமுண்டீஸ்வரி கேட்க என் புருஷனை பார்க்க போய்ட்டு வந்தேன் என்று பதிலடி கொடுக்கிறாள். காசு வெட்டி போட்ட பிறகு என்னடி புருஷன் என்று கேட்க, அது நீங்க சொன்னீங்கன்றதுக்காக பண்ணது. ஆனால், சட்டப்படி கார்த்திக் இன்னமும் என்னுடைய புருஷன் தான் என்று பதிலடி கொடுக்கிறாள். அப்போது சந்திரகலா பேச, ரேவதி நீங்க உங்க புருஷனோட வாழ்ந்திருந்தால், இதெல்லாம் தெரியும் என பதிலடி கொடுக்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இந்த விஷயத்தை சந்திரகலா காளியம்மாவிற்கு ஃபோன் போட்டு சொல்கிறாள். காளியம்மா சாமுண்டீஸ்வரிக்கு கார்த்திக் மேல இருக்கிற கோபம் மட்டும் கொஞ்சம் கூட குறைஞ்சிடுவே கூடாது. அதுதான் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சொல்கிறாள். நீ கூடவே இருந்து சாமுண்டீஸ்வரியை ஏற்றிவிட்டுக்கொண்டே இரு என்று சொல்கிறாள். இதை கேட்ட சந்திரகலா, நீங்க சொல்வதும் சரி தான். இவங்க பிரிஞ்சி இருக்குற வரைக்கும் தான் நம்ம போடும் திட்டம் சரியாக நடக்கும் என்கிறாள்.

நிரந்தரமாக பிரித்துவிடலாம்: மறுபக்கம் வீட்டில் சாமுண்டீஸ்வரி கோபத்தோடு இருப்பதை பார்த்த சந்திரகலா என்ன அக்கா, ஏன் இவ்வளவு கோவமா இருக்க என்று கேட்க, அப்போது, சாமுண்டீஸ்வரி, காசு வெட்டி போட்டு இருவரையும் பிரித்துவிட்டால், கார்த்திக் இந்த ஊரை விட்டு போய்விடுவான் என்று பார்த்தா, அவன் நம்ம செங்கல் சூளையை ஏலத்தில் எடுத்து, எனக்கே பிச்சை போடுகிறான். அவனுக்கு இந்த ஊர் மக்களும் ஆதரவாக இருக்காங்க என்கிறாள். அப்போது, சந்திரகலா அக்கா, நம்ம மன கஷ்டம் அவங்களுக்கு தெரியாவில்லை அதன் இப்படி பேசுகிறாள். கார்த்திக் இங்கே இருக்கும் வரைக்கும் ரேவதி அவனை பார்க்க போய் கொண்டுத்தான் இருப்பாள். அவன் இன்னும் இந்த வீட்டோட மாப்பிள்ளை என்கிற திமிர்ல இருக்கிறார். அந்த திமிரை அடக்க வேண்டும் என்றால், கார்த்திக் ரேவதியை நிரந்தரமாக பிரித்து விவாகரத்து வாங்கிவிடலாம். அப்போது தான் அவர்கள் சட்டப்படி பிரிவார்கள் என்று ஐடியா கொடுக்க சாமுண்டீஸ்வரி சம்மதம் சொல்லி வழக்கறிஞர் ஒருவரை சந்திக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். ,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X