கார்த்தியிடம் இருந்து வந்த விவாகரத்து நோட்டீஸ்.. அதிர்ச்சியில் ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக், ரேவதியை பிரித்த போதும் இருவரும் சந்தித்து பேசுவதால், ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி கோபத்தில் இருக்கிறாள். வீட்டில் சாமுண்டீஸ்வரி கோபத்தோடு இருப்பதை பார்த்த சந்திரகலா என்ன அக்கா, ஏன் இவ்வளவு கோவமா இருக்க என்று கேட்கிறாள். அப்போது, சாமுண்டீஸ்வரி, காசு வெட்டி போட்டு இருவரையும் பிரித்துவிட்டால், கார்த்திக் இந்த ஊரை விட்டு போய்விடுவான் இனி எந்த பிரச்சனையும் வராது என்று பார்த்தா, அவன் நம்ம செங்கல் சூளையை ஏலத்தில் எடுத்து, எனக்கே பிச்சை போடுகிறான். அவனுக்கு இந்த ஊர் மக்களும் ஆதரவாக இருக்காங்க என்கிறாள்.
அப்போது, சந்திரகலா அக்கா, கார்த்திக் இங்கே இருக்கும் வரைக்கும் ரேவதி அவனை பார்க்க போய் கொண்டுத்தான் இருப்பாள். அவன் இன்னும் இந்த வீட்டோட மாப்பிள்ளை என்கிற திமில் இருக்கிறான். அந்த திமிரை அடக்க வேண்டும் என்றால், கார்த்திக் ரேவதியை நிரந்தரமாக பிரிய வேண்டும். அதற்கு இருவருக்கும் முறைப்படி விவாகரத்து வாங்கிவிடலாம். அப்போது தான் அவர்கள் சட்டப்படி பிரிவார்கள் என்று ஐடியா கொடுக்க, சாமுண்டீஸ்வரி சம்மதம் சொல்லி வழக்கறிஞர் ஒருவரை சந்திக்கிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி வழக்கறிஞரை சந்திக்க இந்த விஷயம் அறிந்த ஒருவர் ராஜராஜனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லி ஏதாவது பிரச்சனையா என்று விசாரிக்க அதெல்லாம் இல்லை என்று சொல்கிறார். மேலும் இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறார். அடுத்து ராஜராஜன் வக்கீல் ஆபிஸ் முன்னாடி வந்து நிற்க சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா இருவரும் ஷாக் ஆகின்றனர். சாமுண்டீஸ்வரி இந்த விஷயம் ரேவதிக்கு தெரியவே கூடாது. மீறி சொன்னா நீங்க கட்டின தாலி என் கழுத்தில் இருக்காது என்று ஷாக் கொடுக்கிறாள்.
கார்த்திக் பிளான்: இதையடுத்து ராஜராஜன் கார்த்தியை சந்தித்து நடந்ததை சொல்ல அவன் சரி மாமா, இதை நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க என்று சொல்கிறான். அடுத்து வீட்டிற்கு வந்த சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் விவாகரத்து பேப்பரை கொடுத்து கையெழுத்து போட சொல்கிறாள். ரேவதி நீங்க சொன்ன மாதிரியே செய்யுறேன் என்று சொல்லி கையெழுத்து போட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கொஞ்ச நேரத்தில் கார்த்தியிடம் இருந்து விவாகரத்து பேப்பர் வர அதை பார்த்து மேலும் குழப்பமும் அதிர்ச்சியும் அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











