சாமுண்டீஸ்வரிக்கு கார்த்தி வைத்த ஆப்பு.. குழப்பத்தில் சந்திரகலா.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்தியிடம் இருந்து வந்த விவாகரத்து பத்திரத்தில் ரேவதி கையெழுத்து போட அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ரோகிணி, மயில்வாகனம் மற்றும் ராஜராஜன் ஆகியோர் ரேவதியை சந்தித்து கேட்க என் புருஷன் எது பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கு அதனாலதான் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறாள். சந்திரகலா காளியம்மாவிடம் விஷயத்தை சொல்ல கார்த்திகேயன் ஏதொ ஒரு திட்டம் போட்டு தான் இப்படி பண்றான் உஷாராக இருக்கணும் என்று சொல்கிறாள்.
இதையடுத்து இன்றைய எபிசோடில், ராஜராஜன் ஆகியோர் கார்த்தியை சந்தித்து என்ன மாப்பிள்ளை இப்படி செய்துவிட்டீங்க என்று கேட்கிறார். அப்போது கார்த்திக் ஒரு காரணம் இருக்கு மாமா. பொறுமையா இருங்க உங்களுக்கே புரியும் என்று சொல்கிறான். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் கோர்ட்டு கூடுகிறது. கார்த்திக் ரேவதி இருவரும் ஒருமனதாக கையெழுத்து போட்டிருப்பதால் ஈசியாக விவாகரத்து கிடைத்துவிடும் என்று சொல்கிறார். பிறகு விசாரணையில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். நீதிபதி ரேவதியிடம் விருப்பப்பட்டு தான் இந்த முடிவெடுத்தீங்களா என்று கேட்க சாமுண்டீஸ்வரி ஆமாம் என்று சொல்ல நீதிபதி நீங்க எதுக்கு பதில் சொல்றீங்க? உங்க பொண்ணு சொல்லட்டும் என அடக்குகிறார்.

கார்த்திகை தீபம்: அப்போது ரேவதி, விருப்பப்பட்டுத்தான் இந்த முடிவை எடுத்தேன் என்று சொல்கிறார். கார்த்தியும் அதே பதிலை சொல்கிறார். அப்போது நீதிபதி திருமணமாகி ஒரு வருஷம் கூட நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துவாழவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி விவாகரத்து பெற முடியும். நீங்க இரண்டு பேரும், சேர்த்து ஆறு மாதம் ஒன்றாக வாழ்க்கை நடத்துங்க. ஆறு மாதத்திற்கு பிறகும், உங்கள் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்றால், நான் விவாகரத்து தருகிறேன் என்று நீதிபதி சொல்லிவிட சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து, கார்த்திக் மீண்டும் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகிறார். இதைப்பார்த்து சந்திரகலா, சாமுண்டீஸ்வரி அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரோகிணி, மயில்வாகனம் மற்றும் ராஜராஜன் ஆகியோர் கார்த்தியை சந்தித்து சரியான பிளான் என்று சொல்லி அனைவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? அறிய கார்த்திகை தீபம் சீரியல் உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











