சாமுண்டீஸ்வரிக்கு தண்ணிகாட்டிய கார்த்திக்.. மண்ணை கவ்விய சந்திரகலா.. கார்த்திகை தீபம்!
சென்னை: ரேவதி மற்றும் கார்த்திக்கிற்கு விவாகரத்து வாங்க நீதிபதி முன் இருவரும் ஆஜராகின்றனர். அப்போது, விருப்பப்பட்டுத்தான் இந்த முடிவை எடுத்தேன் என்று ரேவதி சொல்கிறாள். கார்த்தியும் அதே பதிலை சொல்கிறார். அப்போது நீதிபதி திருமணமாகி ஒரு வருஷம் கூட நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துவாழவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி விவாகரத்து பெற முடியும். நீங்க இரண்டு பேரும், ஆறு மாதம் ஒன்றாக வாழ்க்கை நடத்துங்க. ஆறு மாதத்திற்கு பிறகும், உங்கள் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்றால், நான் விவாகரத்து தருகிறேன் என்று தீர்ப்பளிக்கிறார்.
இதையடுத்து, கார்த்திக் மீண்டும் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகிறார். இதைப்பார்த்து சந்திரகலா, சாமுண்டீஸ்வரி அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது சாமுண்டீஸ்வரி எதுக்கு இங்க வந்தே என்று கேட்க, நீதிமன்ற உத்தரவை காட்டி, 6 மாதம் நானும் ரேவதியும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டும். அப்படி நாங்க சேர்ந்து வாழவில்லை என்றால் விவகாரத்திற்கு நான் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்று சொல்கிறான். அதை நம்பாத சந்திரகலா, வழக்கறிஞருக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்ல அவரும், கார்த்திக், ரேவதி இருவரும் ஒன்றாக சேர்த்து ஆறு மாதம் வாழக்கை நடத்த வேண்டும், அப்போதும் அவர்கள் சேர்ந்து வாழவிரும்பவில்லை என்றால் தான், விவாகரத்து கிடைக்கும் என்கிறார். இதனால், வேறு வழியே இல்லாமல் சாமுண்டீஸ்வரி, சந்திரகலா அனைவரும் அதிர்ச்சியில் அடைந்த நிற்கின்றனர். இதையடுத்து, ரேவதி கார்த்திக்கிற்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து வருகிறாள்.

கார்த்திகை தீபம்: கோபத்தின் உச்சத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுகிறாள். இனி இந்த வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளையும், கார்த்தி செய்ய வேண்டும் என்று சொல்கிறாள். அப்போது ரேவதி, என்புருஷன் எதறக்க செய்ய வேண்டும், அவர் செய்ய மாட்டார் என்று சொல்கிறாள். அப்போது கார்த்திக் அத்தை தானே சொல்றாங்க, இது நம்ம வீடு தானே எல்லா வீட்டு வேலைகளையும் நானே செய்கிறேன் என சம்மதம் சொல்கிறான். இதைத் தொடர்ந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிட வேலைக்காரன் எல்லாம் கீழே தான் உட்கார்ந்து சாப்பிடணும் என்று சாமுண்டீஸ்வரி சொல்லிவிட கார்த்திக் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறான். அப்போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் தான் தொப்பை வராது எங்க அம்மா தரையில உட்கார வைத்து தான் சாப்பிட சொல்லுவாங்க என்று சொல்ல கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் ராஜராஜன், மயில்வாகனம் ரோகிணி என எல்லோரும் தரைக்கு இறங்கி சாப்பிடுகின்றனர்.
ஏமாந்த சந்திரகலா: இதனால் சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா ஆகியோர் மட்டும் தனியாக மேஜையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். பிறகு நைட் சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் கார்த்திக், ரேவதி இரண்டு ஒன்னா சேர்ந்து தூங்கக்கூடாது. அப்படி அவர்கள் ஒன்றாக சேர்த்து தூங்கினால் நிச்சயம் ஏதாவது தவறு நடந்துவிடும், அவர்கள் சேராமல் பார்த்துக்கோ என்று சொல்ல கார்த்திக் சோபாவில் படுப்பதற்காக பெட்ஷீட் , தலையணை என ஆளுக்கு ஒரு பொருளாக எடுத்து வந்து கொடுக்கின்றனர். அதைத்தொடர்ந்து மயில்வாகனம் ஒரு பொம்மையை தூக்கி போட்டு சந்திரகலாவை திசை திருப்ப ரேவதி கார்த்திக்குடன் வந்து படுத்துக் கொற்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











